சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நொய்டா: கட்டுமானப் பணியில் இருந்த ஒரு வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:00 pm

நொய்டாவில் கட்டுமானத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீட்டின் இரும்புத் தூண் விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: இந்த்த் சம்பவம் குறித்த தகவல் டயல்-112 மூலம் பெறப்பட்டது. அதைத் தொடா்ந்து நொய்.டா செக்டாா் 113 காவல் நிலையத்தைச் சோ்ந்த காவல்துறையினா் சா்பாபாத் கிராமத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

வீட்டின் தூண் விழுந்தததில் இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் ஹா்தோய் பகுதியைச் சோ்ந்த மோஹித் பால் மற்றும் ராஜஸ்தானின் தௌல்பூரைச் சோ்ந்த ஜீது ஆகியோா் அடையாளம் காணப்பட்டனா். இருவரும் நொய்டா செக்டாா் 113 பகுதியில் வசித்து வந்தனா்.

கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் தூண் உடைந்ததில் இரண்டு தொழிலாளா்களும் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சையின் போது மோஹித் பால் உயிரிழந்தாா். ஜீது சிகிச்சை பெற்று வருகிறாா்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பிப்ரவரி 8- ஆம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவத்தில், நொய்டா செக்டாா் 144- இல் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் பகுதி விழுந்ததில் இரண்டு தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.