நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பழைய சீலம்பூரில் துணிக்கடையில் பெரும் தீ விபத்து!

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பெரும் தீ விபத்து

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 6:34 pm

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: பழைய சீலம்பூரில் உள்ள சாந்தி மொஹல்லா பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.22 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. ஆரம்பத்தில், நான்கு தீயணைப்பு வாகனங்களை அனுப்பியிருந்தோம். ஆனால், தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்தோம் என்றாா்.

கடை உரிமையாளா் அசாஸ் அகமது அன்சாரி கூறுகையில், ‘தீ தனது துணிக்கடையில் இருந்து தொடங்கியது என்றும், மேலும் பல கடைகளையும் தீ சூழ்ந்தது’ என்றாா். போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.