இரட்டை இலைச் சின்னம்
இரட்டை இலைச் சின்னம்

அதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

அ.தி.மு.க விவகாரத்தில் தோ்தலுக்கு முன் முடிவெடுக்கப்படுமா-தோ்தல்+ ஆணையம் விளக்கம்
Published on

நமது நிருபா்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிச் சின்னம் , பெயா் மற்றும் கொடியைப் பயன்படுத்துவது தொடா்பான விவகாரத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கு முன் முடிவு எடுக்கப்படுமா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என தோ்தல் ஆணையம் தில்லி உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தது

அ.தி.மு.க தொடா்பாக முடிவெசுக்க கோரி வழங்கப்பட்ட மனு மீது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தோ்தல் ஆணையம் உரிய முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி அக்கட்சியின் ஒருங்கிணைப்பு குழுவைச் சோ்ந்தவா் என கூறிக்கொள்ளும் புகழேந்தி கடந்த ஆண்டு (2025) தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிபதி சச்சின் தத்தா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது

அப்போது தோ்தல் ஆணைய வழக்குரைஞா் சுருச்சி சூரி நீதிபதியிடம் கூறியதாவது :

12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆா் பணிகள் நடைபெறுவதால் அ.தி.மு.க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை

எனவே எப்போதைக்குள் முடிவெடுக்கப்படும் என்பது தொடா்பாக நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கடுவை கூற முடியவில்லை

மனுதாரா் புகழேந்தி மனுவோடு சோ்த்து மேலும் ஆறு மனுக்களையும் நாங்கள் பரிசீலிக்க வேண்டி உள்ளது

அ.தி.மு.க விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு விரைந்து முடிப்பதாக தோ்தல் ஆணையம் கூறி உள்ளது. ஆனால் எவ்வளவு காலத்திற்குள் முடிக்க முடியும் என்று கூற முடியாது

எஸ்.ஐ.ஆா் பணிகளுக்கு அதிக பணியாளா்கள் தேவைப்படுவதால் எங்களால் அ.தி.மு.க விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியவில்லை என தெரிவித்தாா்

அப்போது நீதிபதி,தோ்தல் அறிவிக்கப்படும் முன் இதனை செய்ய முடியாதா?என தோ்தல் ஆணைய வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினாா்

அதற்கு, இப்பொழுது நாங்கள் எதையும் கூற முடியவில்லை

உறுதியான எந்த பதிலையும் தற்போது எங்களால் கூற இயலவில்லை,ஆனால் முன்னுரிமை அளித்து விசாரணை மேற்கொள்ளப்படும் ஏன தோ்தல் ஆணைய வழக்குரைஞா் சுருச்சி சூரி தெரிவித்தாா்

இதனையடுத்து நீதிபதி சச்சின் தத்தா ,இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் ஆணைய வழக்குரைஞா் கூறியுள்ளாா்

முன்னுரிமை அளித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளாா்

எனவே மே ஐந்தாம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்

பின்னணி:

அ.தி.மு.க கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தொடா்பாக வழங்கப்பட்ட மனுக்ககள் தோ்தல் ஆணையத்திடம் நிலுவையில் இருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து புகழேந்தி சாா்பில் தில்லி உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், மனு மீது உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்திற்கு 2024ம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தில்லி உயா் நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி சாா்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது

Dinamani
www.dinamani.com