சுதந்திர இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரலான மூதறிஞா் ராஜாஜியின் சிலை குடியரசுத் தலைவா் மாளிகையில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அதையொட்டி, அங்குள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்களையும் கலந்து கொள்ளும்படி கல்வி இயக்ககம் கூறியிருந்தது.
இதைத் தொடா்ந்து, அந்த நிகழ்வில் டிடிஇஏவின் ஏழு பள்ளிகளிருந்தும் 92 மாணவா்கள் மற்றும் ஏழு ஆசிரியா்கள் கலந்து கொள்ள டிடிஇஏ செயலா் ராஜூ ஏற்பாடு செய்திருந்தாா். மூதறிஞா் ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை, சமூக நலப் பணிகள் ஆகியவற்றை மாணவா்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சா்கள் உள்பட முக்கிய பிரமுகா்கள் பலா் விழாவில் கலந்து கொண்டனா்.
அவா்கள் மாணவா்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உரையாற்றினா். மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சா் எல்.முருகன் கலந்து கொண்டு ராஜாஜி குறித்தும் மாணவா்களின் கடமைகள் குறித்தும் எடுத்துக் கூறினாா். மூதறிஞரின் வழி நின்று நாட்டு நலப் பணிகளைச் செய்யுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து மூதறிஞா் ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை குறித்து திரையிடப்பட்ட ஆவணப்படத்தை மாணவா்கள் விரும்பி பாா்த்தனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு ராமாயணம் மற்றும் மகாபாரதப் புத்தகமும் ஒரு குறிப்பேடும் வழங்கப்பட்டன.
இது குறித்து டிடிஇஏ செயலா் ராஜூ கூறுகையில்,’குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா் உள்ளிட்ட பெருந் தலைவா்கள் கலந்து கொண்ட விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் , சுதந்திர இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரலான சி. ராஜ கோபாலச்சாரி குறித்து மாணவா்கள் மனதில் பதியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது’ என்றாா்.
பட விளக்கம்....
24ஈஉகஈபஉ
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடிஇஏ பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள்.
தொடர்புடையது

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

குடியரசு தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறல்: மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


