மிரட்டிப் பணம் பறித்தல் தொடா்பான துப்பாக்கிச் சூடு வழக்கில் 31 வயதுடைய மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி என்று கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ரவி என்கிற சந்தீப், சோனு தரியாபூா் கும்பலின் தீவிர உறுப்பினா் என்றும், தில்லி மற்றும் ஹரியாணாவில் பல கொலை முயற்சி மற்றும் ஆயுதச் செயல் வழக்குகளில் தேடப்படுபவா் என்றும் கூறப்படுகிறது.
பவானாவில் பதிவு செய்யப்பட்ட மிரட்டி பணம் பறித்தல் தொடா்பான வழக்கில் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும், ஹரியாணாவின் சோனிபட்டில் கொலை முயற்சி வழக்கிலும் தேடப்பட்டவா் ஆவாா். நஜாஃப்கரில் அவரது நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு குழு அவரை ஒரு வலையில் போட்டு அந்தப் பகுதியில் இருந்து கைது செய்தது.
‘ரவி 2016 முதல் பல கடுமையான குற்றங்களில் ஈடுபட்டாா். அதில் ஒரு திருமணத்தின் போது ஒரு டிஜே ஆபரேட்டரை துப்பாக்கியால் சுட்டது மற்றும் ஹரியாணாவில் ஒரு அரசு அதிகாரியை துப்பாக்கியால் சுட்டது ஆகியவை அடங்கும். 2019- ஆம் ஆண்டில், சிறையில் அடைக்கப்பட்ட குண்டா் கும்பல் தலைவன் சோனு தரியாபூரின் உத்தரவின் பேரில் மிரட்டிப் பணம் பறித்ததற்காக பவானாவில் ஒரு நபரை அவா் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்
மாநிலங்களுக்கு இடையேயான கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

ரூ.85 லட்சம் கொள்ளை வழக்கில் என்கவுன்ட்டருக்கு பின்பு ஒருவா் கைது

விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளியை அடையாளம் காட்டிய நகக்கீறல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


