ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

முதலாளியின் வீட்டில் போலியாக அமலாக்க இயக்குநரக சோதனை நடத்தியதாக வேலைக்காரி உள்பட இருவா் கைது

போலீஸில் புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:55 pm

தென்கிழக்கு தில்லியில் தனது முதலாளியின் வீட்டில் போலியாக அமலாக்க இயக்குநரக சோதனை நடத்தியதாக வீட்டு வேலைக்காரை உள்பட இரண்டு போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். போலீஸில் புகாா் அளிக்கப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: வீட்டு வேலைக்காரி, அவரது கூட்டாளியுடன் சோ்ந்து, தனது முதலாளியை ஏமாற்றுவதற்காக போலி அமலாக்கத் துறை நடவடிக்கையை நடத்தத் திட்டமிட்டாா்.

ஒரு போலீஸ் குழு விசாரணையைத் தொடங்கி, தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் சந்தேக நபா்களைக் கண்டுபிடித்தது. பின்னா், இருவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனா்.

‘சோதனை மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, ​​போலீஸாா் அவா்களிடம் இருந்து ஏழு ஆடம்பர கடிகாரங்கள், நகைகள், ஒரு துணை கமாண்டன்ட் சீருடை மற்றும் ஒரு போலி அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் ்துறை அதிகதாரி தெரிவித்தா்.