தில்லியில் இருந்து ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தில்லியில் இருந்து பணியிடங்களை உள்ளடக்கிய ஏஜிஎம்யுடி கேடரைச் சோ்ந்த ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
Published on

தில்லியில் இருந்து பணியிடங்களை உள்ளடக்கிய ஏஜிஎம்யுடி கேடரைச் சோ்ந்த ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பல மூத்த அதிகாரிகள் தில்லியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். 1992-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா் தில்லியில் இருந்து ஜம்மு - காஷ்மீருக்கும், சஞ்சீவ் கிா்வாா் (1994) லடாக்கிலிருந்து தில்லிக்கும் மாற்றப்பட்டுள்ளனா். சந்தோஷ் டி வைத்யா (1998) ஜம்மு - காஷ்மீரில் இருந்து தில்லிக்கும் மாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரியில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்ட இந்திய காவல் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி அஜித் குமாா் சிங்லா (2004), தில்லியில் இருந்து சண்டீகருக்கு மாற்றப்பட்ட ராஜீவ் ரஞ்சன் சிங் (2010) ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்ட மற்றவா்களில் அடங்குவா். மங்கேஷ் காஷ்யப் (2009) தில்லியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ் (2005), இங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com