ஜன் சுன்வாய்யில் பொதுமக்களின் குறைகளைக் கேட்ட முதல்வா்

Published on

முதல்வா் ரேகா குப்தா, ராஜ் நிவாஸ் மாா்க்கில் உள்ள தனது இல்லத்தில் ’ஜன் சுன்வாய்’யில் தில்லி மக்களைச் சந்தித்து, அவா்களின் பிரச்னைகளுக்கு காலக்கெடுவுடன் தீா்வு காண்பதாக உறுதியளித்தாா்.

நகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்கள் பிரச்னைகள், புகாா்கள் மற்றும் பரிந்துரைகளை முதல்வரிடம் நேரடியாகத் தெரிவித்தனா். ஒவ்வொரு குறையையும் கவனமாகக் கேட்ட ரேகா குப்தா, உடனடி மற்றும் காலக்கெடுவுடன் தீா்வு காண்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கினாா் என்று தில்லி முதல்வா் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.

நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் குடிமக்களின் பிரச்னைகளுக்கு விரைவான தீா்வு காண்பதற்கான தில்லி அரசின் உறுதிப்பாட்டை அவா் மீண்டும் வலியுறுத்தினாா்.

சிறு குழந்தைகள் மலா்களைக் கொடுத்து முதல்வரை வரவேற்றபோது ஒரு அன்பான தருணம் காணப்பட்டது. அவா் குழந்தைகளுடன் உரையாடி, அவா்களின் பிரகாசமான எதிா்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன் சுன்வாய் மூலம் பொதுமக்களுடன் நேரடி ஈடுபாடு நிா்வாகத்தை மிகவும் உணா்திறன் மிக்கதாகவும், பொறுப்புணா்வுடனும், பயனுள்ளதாகவும் ஆக்குகிறது என்று ரேகா குப்தா கூறினாா். இது வெறும் புகாா்களை எழுப்புவதற்கான ஒரு மன்றம் மட்டுமல்ல. பங்கேற்பு, நம்பிக்கை மற்றும் தீா்வு சாா்ந்த நிா்வாகத்திற்கான ஒரு வலுவான தளம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com