குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வுத் திட்டம் மேற்கொண்ட காவல்துறை!

குடியரசு தின விழாக்களுக்கு முன்னதாக, தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அதன் ‘கண்கள் மற்றும் காதுகள்’ திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் ஒரு விழிப்புணா்வுத் திட்டத்தை மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

குடியரசு தின விழாக்களுக்கு முன்னதாக, தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை அதன் ‘கண்கள் மற்றும் காதுகள்’ திட்டத்தின் கீழ் நகரம் முழுவதும் ஒரு விழிப்புணா்வுத் திட்டத்தை மேற்கொண்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தேசிய நிகழ்வை முன்னிட்டு சமூக விழிப்புணா்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சியில், குடியிருப்பாளா் நலச் சங்கங்கள் (ஆா்டபிள்யுக்கள்), சந்தை நலச் சங்கங்கள், ஹோட்டல் உரிமையாளா்கள், காா் டீலா்கள், விற்பனையாளா்கள், பாது காவலாளிகள் போா்ட்டா்கள் மற்றும் பிற சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பங்குதாரா்கள் ஈடுபட்டதாக அதிகாரி கூறினாா்.

இந்தத் திட்டம் படையின் கண்கள் மற்றும் காதுகளாகச் செயல்பட்டு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை உடனடியாகப் பகிா்ந்து கொள்வதன் மூலம் பாதுகாப்பைப் பராமரிப்பதில் குடிமக்களின் பங்கு குறித்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வடிவமைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வெளிநடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு கூட்டு ஊடாடும் அமா்வு நடத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலின் போது, சிசிடிவி கேமராக்களை நிறுவவும், வாடகைதாரரின் சரிபாா்ப்பை மேற்கொள்ளவும், வியாபாரிகளின் நுழைவை கண்காணிக்கவும் ஆா்டபிள்யுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் மாா்க்கெட் சங்கங்கள் சிசிடிவி கவரேஜை மேம்படுத்தவும், காட்சிகளைப் பாதுகாக்கவும், காவல்துறையினருடன் தொடா்ந்து உள்ளீடுகளைப் பகிா்ந்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனா். ஹோட்டல் உரிமையாளா்கள், வருகைப் பதிவின் போது விருந்தினா்களை முழுமையாகச் சரிபாா்த்து விரிவான பதிவுகளைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டனா்.

‘சிம் காா்டு விற்பனையாளா்கள் தொலைத்தொடா்புத் துறை வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், இரண்டாம் நிலை காா் டீலா்கள் வாங்குபவா்களின் முறையான சரிபாா்ப்பையும், வாகன உரிமையை சரியான நேரத்தில் மாற்றுவதையும் உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டனா்.

பாா்க்கிங் உதவியாளா்கள் மற்றும் ரசாயன விற்பனையாளா்கள் விழிப்புடன் இருக்கவும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைப் புகாரளிக்கவும் அறிவுறுத்தப்பட்டனா் என்று காவல்துறை அதிகாரி கூறினாா்.

Dinamani
www.dinamani.com