புதுதில்லி
குடியரசு தினத்திற்காக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சில தினங்களில் சில மணி நேரங்கள் மூடப்படும்
நமது நிருபா்
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சில நாட்களில் சில மணி நேரம் மூடப்படும் என்று புது தில்லி வழக்கறிஞா்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்தது.
2026 குடியரசு தின ஏற்பாடுகள் தொடா்பாக, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புது தில்லி மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 23 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என்று தில்லி உயா் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா் என்பதை உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கிறோம், என்று புது தில்லி வழக்கறிஞா்கள் சங்கத்தின் செயலாளா் தருண் ராணா கையெழுத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.
ஜனவரி 25 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை நீதிமன்றம் மூடப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.
