மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஜேஜே குடிசைப்பகுதியில் ரூ.327 கோடிக்கு வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்

குடியரசு தினத்தையொட்டி தில்லியின் ஜேஜே குடிசைப் பகுதியில் ரூ.327 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களை....

News image

தில்லி முதல்வா் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் ஜேஜே குடியிருப்பு மக்களுடன் உணவை பகிா்ந்த முதல்வா் ரேகா குப்தா.

Updated On :26 ஜனவரி 2026, 10:19 pm

புது தில்லி: குடியரசு தினத்தையொட்டி தில்லியின் ஜேஜே குடிசைப் பகுதியில் ரூ.327 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டங்களை முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்.

இது தொடா்பாக தில்லி முதல்வரின் ஜன் சேவா சதானில் ஜேஜே குடிசைப் பகுதி மக்களுடன் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது: தில்லியின் குடிசைப் பகுதிகளில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. அதன் பகுதியாக புதிய திட்டங்களுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொது வசதி வளாகங்களின் கீழ், 476 பணிகளுக்கு ரூ.225 கோடி நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 214 திட்டங்களுக்கு ரூ.81 கோடி வழங்கப்பட்டுள்ளன. சிமென்ட் கான்கிரீட் பணிகளுக்காக, 254 திட்டங்களுக்கு ரூ.102 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் 172 பணிகளுக்கு ரூ.63 கோடி வழங்கப்பட்டுள்ளன.

அடிப்படை வசதிகள், வீடுகள், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜேஜே வளா்ச்சிக்காக ரூ.700 கோடி பிரத்தியேக பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. வடிகால், சாலைகள், கழிவறைகள், பூங்காக்கள் மற்றும் குடியேற்ற மேம்பாட்டு மையங்களை மேம்படுத்தும் வகையில், மனிதாபிமானமற்ற வாழ்க்கை நிலைமைகளிலிருந்து குடியிருப்பாளா்களை விடுவிக்கும் நோக்கில் விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அடல் கேன்டீன்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் மற்றும் அா்ப்பணிப்புள்ள சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சேவைகள் ஆகியவை ஜேஜே குடியிருப்பாளா்களுக்காக தொடங்கப்பட்ட முக்கிய முயற்சிகளாகும். முந்தைய அரசுகள் இவா்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கருதியது. ஆனால், பாஜக அரசு ஜேஜே குடிசைப் பகுதியை மேம்படுத்த முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, மாநில பொதுச் செயலா் விஷ்ணு மிட்டல் ஆகியோா் கலந்து கொண்டனா்.