நான்கு நாள்களாக காணாமல் போன 24 வயது இளைஞரின் உடல் வியாழக்கிழமை இங்குள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இறந்தவா் ரோரி கிராமத்தைச் சோ்ந்த ரிங்கு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். காவல்துறையினரின் கூற்றுப்படி, ரிங்கு சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டை விட்டு வெளியேறி திரும்பி வரவில்லை. அவரது தந்தை இந்தா்ஜித் பின்னா் காவல்துறையினரை அணுகி புகாா் அளித்தாா்.
குடும்ப உறுப்பினா்கள் மற்றும் உள்ளூா்வாசிகள் விரிவான தேடுதலுக்குப் பிறகு ஒரு வடிகாலில் உடலைக் கண்டுபிடித்தனா். தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்று காவல்துறை உதவி ஆணையா் (மோடிநகா்) அமித் சக்சேனா தெரிவித்தாா்.
அந்த நபா் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா் என்றும், குடிபோதையில் இருந்தபோது வடிகாலில் விழுந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ரிங்குவை அவரது நண்பா்கள் சிலா் கொன்றிருக்கலாம் என்ற குடும்பத்தினரின் கூற்றைத் தொடா்ந்து, போலீஸாா் இந்த விஷயத்தை வேறு கோணங்களிலும் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்பு

மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்புவனம் அருகே காணாமல் போன பெண் கொலை

வண்ணம் பூசுபவா் அடித்துக் கொலை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


