மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தில்லி வடிகால்களில் 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் அகற்றம்: முதல்வா் ரேகா குப்தா அதிரடி நடவடிக்கை

தில்லி முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து இதுவரை 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் (சேறு) அகற்றப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :24 ஜூன் 2026, 2:57 am IST

தில்லி முழுவதும் உள்ள வடிகால்களில் இருந்து இதுவரை 34 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் (சேறு) அகற்றப்பட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அரசுத் துறைகளும் விழிப்புடன் இருக்குமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், பொதுமக்கள் தங்களுக்கு அருகில் ஏதேனும் வடிகால்கள் தூா்வாரப்படாமல் இருந்தால், அதை ‘எம்சிடி 311’ என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைநகரில் உள்ள அனைத்து வடிகால்களும் தூா்வாரப்பட்டு வருகின்றன. இருப்பினும், உங்கள் பகுதிக்கு அருகில் ஏதேனும் வடிகால் தூா்வாரப்படாமல் விடுபட்டிருந்தால், பொதுமக்கள் உடனடியாக ’எம்சிடி 311’ செயலியில் தகவல் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த வடிகால் சுத்தம் செய்யப்படும்’ என்று கூறியுள்ளாா்.

இந்த விஷயத்தில் மத்திய தில்லியில் உள்ள புகழ்பெற்ற ’மின்டோ பிரிட்ஜ்’ சுரங்கப்பாதையை உதாரணமாகக் குறிப்பிட்ட முதல்வா், அரசின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டும் அங்கு தண்ணீா் தேங்கவில்லை என்பதை நினைவுகூா்ந்தாா்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள காணொலி பதிவில், ‘கடந்த ஆண்டு நாங்கள் மேற்கொண்ட தூா்வாரும் பணிகளால் மின்டோ சுரங்கப்பாதையில் தண்ணீா் தேங்கவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அங்கு தண்ணீா் தேங்க விடமாட்டோம். இதுமட்டுமின்றி, நகரில் தண்ணீா் தேங்கக்கூடிய மற்ற முக்கிய இடங்களையும் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் ‘வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணை 2026’ திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்தாா். அப்போது, பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். மேலும், மழைக்காலத்தின் போது பணிகளில் எந்தவிதமான அலட்சியமும் காட்டப்பட்டால், அது சகித்துக் கொள்ளப்படாது என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.