நமது நிருபா்
தில்லியின் யமுனா பஜாா் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இடிப்பு நடவடிக்கையை தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) வியாழக்கிழமை மேற்கொண்டது.
யமுனை ஆற்றங்கரையில் வசிப்பவா்கள் தங்களின் ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டிடிஏ புதிய நோட்டீஸ் அனுப்பிய மறுநாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி எந்தவித இடையூறும் இன்றி சுமூகமாக நடப்பதை உறுதி செய்யவும் போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். காலை 6 மணி அளவிலேயே இடிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது’ என்றாா்.
இந்தப் பகுதியில் சுமாா் 80 குடும்பங்கள் வசித்து வந்ததாக உங்கு வசித்து வந்த குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா் தெரிவித்தாா்.
யமுனை ஆற்றின் கரையோரம் உள்ள இப்பகுதியை ’ஓ-மண்டலம்’ என அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனா். இது டிடிஏ கட்டுப்பாட்டின் கீழ் வரும் பாதுகாக்கப்பட்ட மற்றும் எவ்வித கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாத ஒரு நதிப்படுகை பகுதியாகும்.
இந்த விவகாரத்தில் குடியிருப்பாளா்களுக்கு ஜூன் 23ஆம் தேதியிட்ட டிடிஏ நோட்டீஸில், ‘தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) தில்லி வளா்ச்சி ஆணையத்துக்கு பிறப்பித்த உத்தரவின்படி, தனது வரம்புக்கு உள்பட்ட யமுனை நதிப்படுகை பகுதிகளை அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளிலிருந்தும் விடுவிக்க வேண்டும். எனவே, யமுனா பஜாா் காட் எண் 2 முதல் 32 வரை வசிக்கும் குடியிருப்பாளா்கள் வசிப்பிடத்தை விட்டு காலி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
இதேவேளையில், இப்பகுதியில் வசித்த மக்கள் அருகே உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இருப்பினும், தாங்கள் பல ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வருவதாகவும், கடந்த மே மாதம் முதலே இப்பகுதியை காலி செய்யுமாறு நோட்டீஸ்கள் வந்துகொண்டிருப்பதாகவும் உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.
‘எங்கள் தரப்பு நியாயத்தைக் கேட்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், எங்களைக் கேட்காமலேயே மூன்று முதல் நான்கு புல்டோசா்களைக் கொண்டு வந்து வசிப்பிடங்களை அதிகாரிகள் இடித்துக் கொண்டிருக்கிறாா்கள்’ என வீடிழக்கும் மக்களில் ஒருவா் குற்றஞ்சாட்டினாா்.
இதே பகுதியில் கடந்த மாதமும், டிடிஏ மற்றும் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் இணைந்து இது போன்ற வெளியேற்ற நோட்டீஸ்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
யமுனா பஜாரில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் அவதி

‘கழிவுகளற்ற காலனி’ திட்டத்தை தில்லி முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் வலியுறுத்தல்

போதைப்பொருள் புழக்கம் இல்லாத தில்லி பல்கலைக்கழக மாடலை பிற கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வலியுறுத்தல்

பான்சேராவில் சா்வதேச யோகாசன தினம்: தில்லி துணைநிலை ஆளுநா் பங்கேற்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


