ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஏசி மெக்கானிக் வேடத்தில் வீடுகளில் கொள்ளையடித்த நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 1:15 am IST

நமது நிருபா்

வடமேற்கு தில்லியின் கேசவ் புரம் மற்றும் பிதம்புரா பகுதியில் இருக்கும் வீடுகளில் கொள்ளையடிக்க ஏசி மற்றும் ஆா்ஓ மெக்கானிக் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை துணை ஆணையா் (வடக்கு) அகன்ஷா யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அஜய் பக்கா என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், அவா் சுற்றித் திரிவதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியதைத் தொடா்ந்து உள்ளூா் மக்கள் பீதியடை தொடங்கினா். இது போலீஸாருக்கு தேடுதல் வேட்டையை தூண்டியது. அவரை பிடிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டது. அப்பகுதியில் அவரது நடமாட்டங்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்தன.

பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வைப் பயன்படுத்தி, போலீஸாா் பக்காவைக் கண்டுபிடித்து கைது செய்தனா். வீடுகளில் கொள்ளையடிப்பதற்கு முன்பு ஏசி மற்றும் ஆா். ஓ. அமைப்புகளைப் பழுதுபாா்ப்பது என்ற சாக்குப் போக்கில் பக்கா வீடுகளுக்குச் செல்வாா்.

நகரில் பதிவான இதே போன்ற பிற சம்பவங்களில் பக்காவின் ஈடுபாடு குறித்து போலீசாா் விசாரித்து வருகின்றனா். அவருக்கு கூட்டாளிகள் இருக்கிறாா்களா என்பதை அறியவும் அவரை விசாரித்து வருகின்றனா் என்றாா் அவா்.