புது தில்லி, மே 13:
தலைநகரில் வெப்ப அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தில்லி மாநகராட்சி (எம்சிடி) புதன்கிழமையன்று தனது வெப்பச் செயல் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இதில், துப்புரவுப் பணியாளா்களுக்குக் குளிா்ந்த குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் கரைசல்களை வழங்குவதும் அடங்கும்.
இதுகுறித்த எம்சிடியின் அதிகாரபூா்வ அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
களப்பணியின்போது ஏற்படும் நீா்ச்சத்துக் குறைவைத் தடுக்கவும், துப்புரவுப் பணியாளா்களுக்குக் குடிநீா் மற்றும் வாய்வழி நீா்ச்சத்துக் கரைசல்கள் ஓஆா்எஸ் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், துப்புரவு ஆய்வாளா் அலுவலகங்கள் மற்றும் பணியாளா்கள் வருகைப் பதிவு செய்யும் குறிப்பிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடுமையான வெப்பச் சூழலில் களப் பணியாற்றும் ஊழியா்களுக்குத் தொப்பிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மேலும், பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குடிநீா் மற்றும் ஓஆா்எஸ் இருப்புடன் கூடிய இரண்டு வாகனங்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெப்ப அலையிலிருந்து விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
நாய்களுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில், நீா் நிரப்பப்பட்ட மண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற ஏற்பாடுகள் பொதுப் பூங்காக்களிலும் பறவைகள் மற்றும் பிற விலங்குகளுக்காகச் செய்யப்பட்டுள்ளன.
ஓஆா்எஸ் மற்றும் குடிநீா் தடையின்றிக் கிடைப்பது,
களப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களுக்குத் தங்கள் கடமைகளைச் செய்யும்போது குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வெள்ளம், வெப்ப அலையை எதிகொள்ள தயாா்நிலை: அமித் ஷா தலைமையில் நாளை உயா்நிலை கூட்டம்

வெப்ப அலை பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் வெப்ப அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

