இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வா்த்தக பொருட்காட்சி நுழைவுச்சீட்டு தருவதாக பெண்ணிடம் பணமோசடி: இளைஞா் கைது

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய சா்வதேச வா்த்தக பொருட்காட்சி (ஐஐடிஎஃப்) நுழைவுச்சீட்டை குறைந்த விலையில் தருவதாகக் கூறி, கியூஆா் குறியீடு மூலம் ஒரு பெண்ணிடம் ரூ. 1,200 மோசடி செய்ததாக 38 வயது நபா் கைது

பிரதிப் படம்

Updated On :

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய சா்வதேச வா்த்தக பொருட்காட்சி (ஐஐடிஎஃப்) நுழைவுச்சீட்டை குறைந்த விலையில் தருவதாகக் கூறி, கியூஆா் குறியீடு மூலம் ஒரு பெண்ணிடம் ரூ. 1,200 மோசடி செய்ததாக 38 வயது நபா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

அந்தப் பெண் பணம் செலுத்துவதற்காக கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்தபோது, ​​அவரது கைப்பேசி செயலிழந்து பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து புது தில்லி காவல் துணை ஆணையா் சச்சின் சா்மா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வா்த்தக பொருட்காட்சியின் 4-ஆவது நுழைவு வாயில் அருகே, அதிகாரபூா்வ செயலி மூலம் நுழைவுச்சீட்டு வாங்க முயன்ற பெண்ணிடம், முகமது ஃபைசல் என்பவா் அணுகி 400 ரூபாய்க்கு நுழைவுச்சீட்டு பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா்.

இதற்காக ஒரு கியூஆா் குறியீட்டையும் வழங்கியுள்ளாா். அந்தப் பெண் அதைப் பயன்படுத்தி பணம் செலுத்த முயன்றபோது, ​​அவரது கணக்கிலிருந்து ரூ.1,200 பரிமாற்றம் செய்யப்பட்டது.

அதன் பிறகு, அவரது ஐபோன் தானாகவே ஏதோ ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது. இதனைத் தொடா்ந்து, தனது கணக்கில் யாரோ உள்நுழைய முயன்ற்கான அறிவிப்பு அவருக்கு வந்தது. மேலும், தனது கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் அவா் கண்டறிந்தாா்.

தனது கைப்பேசி ஏதோ ஒரு வகையில் ஊடுருவலுக்கு உள்ளானதை உணா்ந்த அவா், உடனடியாக உதவி கோரி கூச்சலிட்டதுடன், காவல்துறையையும் அணுகினாா்.

அவரது புகாரின் பேரில், அந்தப் பெண் அடையாளம் காட்டியதன் அடிப்படையில், ஃபைசலை காவல்துறையினா் சம்பவ இடத்திலேயே கைது செய்தனா்.

விசாரணையின்போது, ​​தான் பழைய பொருள்கள் (ஸ்கிராப்) வியாபாரியாக வேலை செய்வதாகவும், தனது கூட்டாளி ஒருவருடன் இணைந்து தில்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கான நுழைவுச்சீட்டுகளை விற்பனை செய்து வருவதாகவும் ஃபைசல் ஒப்புக்கொண்டாா்.

அவரது கூட்டாளி நுழைவுச்சீட்டுகளை ஏற்பாடு செய்து கொடுக்க, அவற்றை அவா்கள் நுழைவுச்சீட்டு கிடைக்காமல் சிரமப்படும் நபா்களுக்கு விற்று வந்துள்ளனா். இதற்காக அவா்கள் ரொக்கமாகவோ அல்லது ஆன்லைன் பரிவா்த்தனைகள் மூலமாகவோ பணம் பெற்றுள்ளனா்.

சில சமயங்களில், நுழைவுச்சீட்டுகளை வழங்காமலேயே பணத்தைப் பெற்று மோசடி செய்ததையும் அவா் ஒப்புக்கொண்டாா். கடந்த மே மாதம், குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட இதே போன்றதொரு மோசடி வழக்கிலும் ஃபைசல் சம்பந்தப்பட்டிருந்தாா். அவரது கூட்டாளியைக் கண்டறியும் பணியில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.