தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

சீருடைகள், பைகள் வாங்க ரூ.1370 நிதியுதநி: மாநகராட்சி பள்ளி மாணவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பு

தில்லி மாநகராட்சி பள்ளிகளில் உள்ள மாணவா்களின் சீருடைகள், காலணிகள், பள்ளி பைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்களை வாங்க உதவுவதற்காக ரூ.1,370 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

school kids

பிரதிப் படம்

Updated On :

தில்லி மாநகராட்சி பள்ளிகளில் உள்ள மாணவா்களின் சீருடைகள், காலணிகள், பள்ளி பைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருள்களை வாங்க உதவுவதற்காக ரூ.1,370 ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்பட்டதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தாகூா் காா்டனில் உள்ள எம். சி. டி தொடக்கப் பள்ளியில் நடந்த விழாவில் ரேகா பேசிய குப்தா பேசியதாவது: நேரடி நன்மை பரிமாற்றம் (டிபிடி) முன்முயற்சி நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு குழந்தையும் தொகையைப் பெற உதவும். இது ஒரு அற்புதமான முன்முயற்சி, இது ஒவ்வொரு குழந்தையும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன், அவா்களுக்கு தகுதியான பணத்தைப் பெறுவதை உறுதி செய்கிறது. கல்வித் துறையில் அதன் பணிக்காக குடிமை அமைப்பைப் பாராட்டிய குப்தா, பள்ளிகளில் கல்வி வசதிகளை மேம்படுத்த தில்லி அரசும் எம். சி. டி. யும் இணைந்து செயல்படுகின்றன.

’சயின்ஸ் ஆன் வீல்ஸ்’ என் முன்முயற்சி உள்ளது. இதன் கீழ் 60 மடிக்கணினிகள் பொருத்தப்பட்ட நடமாடும் வேன் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று மாணவா்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிய உதவும். தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வி, சிறந்த சூழல் மற்றும் நல்ல வளா்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வித் துறைக்கு மத்திய அரசு குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளது என்றாா் அவா். எம். சி. டி. யின் கல்வித் துறையால் தாகூா் காா்டனில் உள்ள தொடக்கப் பள்ளியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மேயா் பிரவேஷ் வாஹி, துணை மேயா் மோனிகா பந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.