ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

நான் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை... ஐ லவ் லைஃப்... சிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ?!
ஐ லவ் லைஃப்... இந்த 95 வயதுப் பாட்டிக்கு இருக்கும் சமூக அக்கறையில் பாதி நமக்கிருந்தால் போதுமே!

சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த திருமதி காமாட்சி சுப்ரமணியம் அவர்கள் தான் நமது இந்த வார தினமணி.காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ சிறப்பு விருந்தினர். 95 வயதில் பாட்டி லிஃப்டை எதிர்பார்க்காமல் படியேறி ஸ்டுடியோவுக்கு நடந்த வேகத்தில் தெரிந்தது இந்த மகத்தான வாழ்வின் மீது அவருக்கிருந்த ப்ரியம்! 

‘நான் வாழ்க்கையை அவசர அவசரமாக வாழ்ந்து முடிக்க விரும்பவில்லை... ஐ லவ் லைஃப்... சிங்கப்பூர் நன்னாருக்கு, மலேசியா நன்னாருக்குன்னு சொல்றவா நம்மூரையும் நல்லதா பண்ண தெருவில் இறங்கி போராட வேண்டாமோ?! ஒருத்தர் ஃபோன் பண்ணார்... பாட்டி எங்க பக்கத்துல இன்னின்ன விதத்துல பிரச்னை, நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டார். நான் ரொம்ப சந்தோசமா சரின்னேன். அவருக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முதற்கொண்டு அந்தத்துறை சேர்ந்தவா அத்தனை பேர் ஃபோன் நம்பரையும் தந்து உங்க பிரச்னை பத்திப் பேசுங்கோன்னேன்... அவ்வளவு தான். அப்புறம் அவரை ஆளையே காணோம். அவர் நினைச்சுண்டார், நானே எல்லாத்துக்கும் பேசி அவரோட பிரச்னையை சால்வ் பண்ணி தருவேன்னுட்டு. நான் என்ன சொல்றேன்னா? நான் உங்களோட நிக்கறேன்... வாங்க ரெண்டு பேருமா கடமையைச் சரியா செய்யாத கார்ப்பரேஷன்காரங்களையும், மத்தவாளையும் ஒரு கை பார்க்கலாம்ங்கறேன். ஆனா அவா, நினைச்சுக்கறா அவங்க இறங்கி வந்து எந்த ஸ்டெப்பும் எடுக்காம நானே அவங்க பிரச்னையை சுமந்துண்டு எல்லா இடத்துக்கும் ஓடியாடி சால்வ் பண்ணனும்னுட்டு. இது சரியில்லை. இன்னைக்கிருக்கற யங்ஸ்டர்ஸ் எல்லாம் அப்படி நினைக்கப் படாது. இதான் என்னோட ஆதங்கம்.’

- என்று பாட்டி சொல்லி முடிக்கையில் அவரது ஆதங்கம் நம்மையும் யோசிக்க வைப்பதாகவே இருக்கிறது.

ஏனென்றால் சமூக அக்கறை, சமூகப் பொறுப்புணர்வு என்பது ஒரு சிலருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட நிபந்தனையோ அல்லது வாழ்க்கை முறையோ அல்ல. அது நம் அனைவரின் ரத்த நாளங்களுக்குள்ளும் சுடச்சுட சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருக்க வேண்டிய ரத்தம் போன்று விறு விறுப்பாக இருக்க வேண்டியதொரு உன்னதமான உணர்வு. அதைத் தட்டி எழுப்பத் தான் திருமதி காமாட்சி சுப்ரமணியம் போன்றவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாட்டியின் நேர்காணலைக் கண்டபிறகு நம்மையும் அந்த சுரணை தாக்கினால் சரி!

இது நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே...

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று தினமணி.காமில் வெளியாகும். காணத்தவறாதீர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com