வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம்

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம்-ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை) - முனைவர் தாயம்மாள் அறவாணன்; பக்.704; ரூ.300; தமிழ்க்கோட்டம், சென்னை-29; )044-23744568. இத்தனை நாள்களாக இப்படியொரு "பெண் புலவர் களஞ்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:19 am

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம்-ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை) - முனைவர் தாயம்மாள் அறவாணன்; பக்.704; ரூ.300; தமிழ்க்கோட்டம், சென்னை-29; )044-23744568.

இத்தனை நாள்களாக இப்படியொரு "பெண் புலவர் களஞ்சியம்' வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக் கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட "கயமனார்' என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை - சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, அவரது பெயரும் படைப்புகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்பாற் புலவர்களைப் பற்றிய இன்றியமையாத பல செய்திகள் உள்ளன. நூலின் இறுதியில் பொருளடைவு தந்திருப்பது பாடல்களைத் தேடிப்பிடிக்கும் சிரமத்தைத் தவிர்த்துள்ளது. நூலாசிரியை தனது கடின உழைப்பால் நமக்குக் கற்கண்டு குவியலைத் தந்திருக்கிறார். அதிக பக்கங்கள்; அரிய தகவல்கள்; மிகக்குறைந்த விலை! வாய்ப்பை நழுவவிடலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.