புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி

பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி- கலைமாமணி விக்கிரமன்; பக்.304; ரூ.160; நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை-14; )98847 14603. வரலாற்று அடிப்படையில் எழுதப்படும் கதைகளில் வரலாற்று உண்மைகள் 60 சதவீதத்துக்கும

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:24 am

பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி- கலைமாமணி விக்கிரமன்; பக்.304; ரூ.160; நிவேதிதா புத்தகப் பூங்கா, சென்னை-14; )98847 14603.

வரலாற்று அடிப்படையில் எழுதப்படும் கதைகளில் வரலாற்று உண்மைகள் 60 சதவீதத்துக்கும் குறையாமல் இருக்க வேண்டும் என்ற வரையறையை வைத்துள்ளவர் கலைமாமணி விக்கிரமன். அந்த இலக்கணத்துடன் அவர் படைத்துள்ள பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி- சிறப்புடன் விளங்குகிறது. சரித்திர நவீனங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டாத அல்லது படித்துப் பழக்கம் இல்லாத இக்காலத்து இளைஞர்களுக்கும் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது.

புதிதாக சரித்திர நாவல்களைப் படிப்போருக்கு புத்தகத்தின் முதல் 20 பக்கங்கள் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆயினும் பக்கங்கள் செல்லச் செல்ல இப்புத்தகத்தின் விறுவிறுப்பு கூடிக்கொண்டே செல்வதை உணரமுடியும். 84 வயதைக் கடந்த நிலையிலும் கலைநயமிக்க வர்ணனைகளுடன் விக்கிரமன் அளித்துள்ள இந்த நவீனம் படிப்போரை வியக்க வைக்கும்.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய அரசியல் நிலையைப் படம் பிடித்துக் காட்டும் இந்நவீனத்தில் சோழர் கால வரலாற்றைப் பாங்குடன் சித்திரித்துள்ளார். மன்னர்களுக்கு இடையிலான பகைமை உணர்வு, ஒருவர் மற்றவரை வீழ்த்த மேற்கொள்ளும் போர்த் தந்திரங்கள் மற்றும் அவை தொடர்பான நடவடிக்கைகளை அறியும்போது அந்தக் காலத்திலேயே இப்படியா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. கண்டராதித்த சோழர், அவர் துணைவியார் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியாரைப் பற்றிய இந்தக் கதையைப் படிப்பவர்கள் அக்காலத்துக்கே சென்று வாழக்கூடிய உணர்வைப் பெறுவர் என்பது நிச்சயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.