நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம் - ஜெ.வீரநாதன்: பக்.322; ரூ.275; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167 ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கோவை-45.

News image
Updated On :1 டிசம்பர் 2013, 7:11 pm

ஜெ. வீரநாதன்

புத்தகம் பற்றிய புத்தகம் - ஜெ.வீரநாதன்: பக்.322; ரூ.275; எùஸன்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167 ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கோவை-45.

புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல், அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்கு வரை அரிய தகவல்களை அள்ளித்தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசையை நிச்சயம் தூண்டிவிடும்.

புத்தகம் தோன்றிய வரலாறு, காகிதம், மை, அச்சுக்கலை உருவான வரலாறுகள், உலகையே புரட்டிப் போட்ட புத்தகங்கள், சர்வதேச புகழ் பெற்ற இலக்கியப் புத்தகங்கள், உலகின் சிறந்த நூல்கள், நூலக வரலாறு, எழுத்துக்கள், எழுத்தாளர்கள், புத்தகங்களைத் தேர்வு செய்யும் முறை, புத்தகம் எழுதும் முறை, காப்புரிமை பெறுதல் என பல அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் பற்றிய பெட்டகமாக காட்சி அளிக்கிறது இந்நூல்.

இதுபோன்ற அரிய நூல்கள் வெளிவருவதன் மூலம் தமிழில் வரும் புத்தகங்களின் தரம் மேலும் உயரும். தமிழ் இணையப் புத்தகங்களை எழுதும் ஆர்வத்தை அதிகரிக்கவும் இது தூண்டுகோலாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.