லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரிக்காத மனமும் சிரிக்கும்

சிரிக்காத மனமும் சிரிக்கும் - பாக்கியம் ராமசாமி; பக்.152; ரூ.60; வானதி பதிப்பகம், சென்னை-17. )044-2434 2810.

Updated On :13 ஜனவரி 2013, 7:39 pm

சிரிக்காத மனமும் சிரிக்கும் - பாக்கியம் ராமசாமி; பக்.152; ரூ.60; வானதி பதிப்பகம், சென்னை-17. )044-2434 2810.

"அடியே கொஞ்சம் சும்மா இரு' எனும் தலைப்பில் தொடங்கி, "குஒசீகுகபிக' (குடும்ப ஒற்றுமை சீர்குலைவு கண்டு பிடிக்கும் கமிட்டி) வரையிலான 27 கட்டுரைகளின் தொகுப்பு. தலைப்பு மட்டுமில்லாது ஒவ்வொரு கட்டுரையுமே நமக்கு ஒரு நகைச்சுவை விருந்தாகவே அமைகிறது என்றால் அது மிகையல்ல.

"தோசை வெட்கமறியாது' கட்டுரையில், "ஒரு பூர்ண சந்திரனே இலையில் இறங்கியதுபோல தோசை அத்தனை சீரான அழகு. அதிலுள்ள துவாரங்களை எண்ணி விடலாம். அத்தனை தெளிவாக இருந்தது' என்று நூலாசிரியர் வர்ணித்து இருப்பார். இதற்கு மேலும் தோசையை ருசிக்க வேண்டுமென்றால் கட்டுரையை படியுங்கள். கடின தோசை, பட்டுப் பட்டான மிருதுவான தோசையின் பரம ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

"அரிசியும் சவரனும் ஒண்ணு', "அய்யாவும் அவரைக்காயும்' உள்ளிட்ட கட்டுரைகள் சமூக அங்கத வகையிலானது. "ஓடு கணவா ஓடு', வீட்டுக்கு ஒரு மைத்துனி வளர்ப்போம்' கட்டுரைகளில் நூலாசிரியரின் வழக்கமான, இயல்பான நகைச்சுவை இழையோடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.