தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் டேஞ்சர்தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வணக்கம்! எல்லாரும் எப்படி இருக்கிறீங்க? தேர்தல் பிரசாரம் எல்லாம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்தாலும், இந்த விடியோ மூலமாக உங்களிடம் மனது விட்டு பேசவேண்டும் என்று நினைக்கின்றேன்.
இன்னும் கொஞ்ச நாளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. இப்போது ஒரு சில விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின் போது, ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கருணாநிதி (Stalin is more dangerous than Karunanidhi) என்று சொன்னார்கள். கலைஞரோடு என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதைவிட தலைவர் என்று கூப்பிட்டதுதான் அதிகம்.
அப்படிப்பட்ட தலைவரைவிட நான் மிகவும் ஆபத்தானவர் என்று அவர்கள் கூறும்போது, எனக்கு ஒன்றேயொன்றுதான் தோன்றியது. தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், தமிழ்நாட்டில் வளர்ச்சியைத் தடுக்கவும் நினைப்பவர்களுக்கு நான் என்றுமே டேஞ்சர்தான். அந்த விஷயத்தில் கலைஞரைவிட ஒருபடி மேலே இருக்கின்றேன் என்றால், எனக்குப் பெருமைதானே. இது எல்லாமே தமிழர்களின் ரத்தத்திலேயே இருக்கிறது” என்றார்.
தமிழà¯à®¨à®¾à®à¯ à®®à¯à®¤à¯à®®à¯, தமிழ௠மà®à¯à®à®³à¯ à®®à¯à®¤à¯à®®à¯ நான௠à®à¯à®£à¯à® பà¯à®°à¯à®®à¯ பாà®à®¤à¯à®¤à¯à®¯à¯à®®à¯ நாம௠à®à®¤à®¿à®°à¯à®à¯à®³à¯à®³à¯à®®à¯ à®à®ªà®¾à®¯à®à¯à®à®³à¯à®¯à¯à®®à¯ மனமà¯à®µà®¿à®à¯à®à¯à®ªà¯ பà¯à®à®¿à®¯à¯à®³à¯à®³à¯à®©à¯.
— M.K.Stalin - தமிழà¯à®¨à®¾à®à¯à®à¯ தலà¯à®à¯à®©à®¿à®¯ விà®à®®à®¾à®à¯à®à¯à®©à¯ (@mkstalin) April 21, 2026
à®à®¾à®£à¯à®à¯à®à®³à¯â¦#வà¯à®²à¯à®µà¯à®®à¯_à®à®©à¯à®±à®¾à® ! pic.twitter.com/wu9Kek7jAD
இதையும் படிக்க... திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
Summary
Chief Minister Stalin has stated that he poses a danger to those who seek to betray Tamil Nadu, as well as to those who attempt to hinder its growth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்! சதிவலையில் சிக்கக் கூடாது - மு.க. ஸ்டாலின்
எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார் விஜய்? மு.க. ஸ்டாலின் கண்டனம்

நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்!

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



