12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதைப் பற்றி...

அசாதுதீன் ஓவைசி - முதல்வர் ஸ்டாலின்.

அசாதுதீன் ஓவைசி - முதல்வர் ஸ்டாலின்.

Published On :

திமுக கூட்டணிக்கு ஏஐஎம்ஐஎம் கட்சி ஆதரவு தருவதாக கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்லுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டணிக் கட்சியினர், மத்திய அமைச்சர், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் மிகத் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத் எம்பியும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்துல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) தலைவருமான அசாதுதீன் ஓவைசி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய ஓவைசி, ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓவைசி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், “சலாம் வலேக்கும், மதிப்பிற்குரிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு வணக்கம். உங்களின் பொன்னான வாக்குகளை நீங்கள் திமுகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

AIMIM president Asaduddin Owaisi on Monday appealed to the people of Tamil Nadu to cast their votes in favour of Chief Minister M K Stalin-led DMK alliance in the April 23 Assembly election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.