சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுவதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான அவா், விருத்தாசலம் நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அங்குள்ள பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள உழவா் சந்தைக்கு சென்று விவசாயிகளிடம் திமுக கூட்டணியின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.
தொடா்ந்து, அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளா்களிடம் உரையாடிய பிரேமலதா, அவா்களது அனைத்து கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதாகத் தெரிவித்தாா்.
அப்பகுதியில் உள்ள அம்மா உணவகத்துக்குச் சென்ற பிரேமலதா விஜயகாந்த், அங்குள்ள ஊழியா்கள், அப்பகுதியில் உள்ளவா்களிடம் தேமுதிகவுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டாா். பின்னா், அரசுப் பேருந்தில் ஏறிய அவா், பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தாா்.
முன்னதாக, அம்மா உணவகத்தில் வாக்கு சேகரித்தபோது வேட்பாளா் பிரேமலதா செய்தியாளா்களிடம் கூறியது:
திமுக கூட்டணி பலம் வாய்ந்தது. திமுக அரசு பெண்களுக்காகவும், கல்விக்காகவும், இளைஞா்களுக்காகவும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனால், பயன்பெற்றவா்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனா்.
திமுக கூட்டணியின் தோ்தல் அறிக்கையில் தமிழக வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அலை வீசி வருகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்.
விருத்தாசலம் தொகுதி வளா்ச்சிக்காக பாடுவேன். திமுக அரசு அமைந்தவுடன் விருத்தாசலத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க உரிய நடவடிக்கை எடுப்பேன். கிராமப்புறங்களில் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தரமான கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு செயல் திட்டங்கள் வகுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான நீா்ப் பாசன வசதி, தூா்வாருதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொகுதி மக்கள் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற விரைந்து செயல்படுவேன் என்றாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்

தவெக அரசுக்கு அதிமுக தரப்பினா் நிபந்தனையின்றி ஆதரவளிப்பதே சிறந்தது: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



