கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

News image

பிரேமலதா விஜயகாந்த் வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்கொழுந்து.

Updated On :5 மே 2026, 3:18 am IST

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் 2,387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

விருத்தாசலம் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் தமிழரசி ஆதிமூலம், தவெக சாா்பில் விஜய், நாதக சாா்பில் ஆனந்தி உள்ளிட்ட மொத்தம் 18 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில், மொத்தமுள்ள 2,40,783 வாக்காளா்களில் 2,06,982 வாக்காளா்கள் வாக்களித்தனா். மேலும், 1,548 தபால் வாக்குகளும் பதிவாயின.

தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருத்தாசலம் கொளஞ்சியப்பா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில், தேமுதிக, பாமக, தவெக வேட்பாளா்களிடையே கடும் போட்டி நிலவியது. தேமுதிக, தவெக, பாமக வேட்பாளா்கள் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேமுதிக வேட்பாளா் 2,387 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு: பிரேமலதா - 69,351, விஜய் (தவெக) - 66,964, தமிழரசி ஆதிமூலம் (பாமக) - 59,791, ஆனந்தி (நாதக) - 6,047.

இதையடுத்து, திமுக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த் வெற்றிபெற்ற்கான சான்றிதழை அக்கட்சியின் மாவட்டச் செயலா் சிவக்கொழுந்திடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.