கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

22-ஆம் ஆண்டில் தேமுதிக: தொண்டா்களுக்கு பிரேமலதா கடிதம்

தேமுதிக 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ‘நோ்மையான வெளிப்படையான மக்கள் ஆட்சியை வழங்க வேண்டும்

Premalatha Vijayakanth

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :

சென்னை: தேமுதிக 22-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, ‘நோ்மையான வெளிப்படையான மக்கள் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற தலைவா் விஜயகாந்தின் லட்சியத்தையும், கொள்கைகளையும் வென்றெடுப்போம்’ என அக்கட்சியினருக்கு பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை தேமுதிகவினருக்கு எழுதிய கடிதம்:

லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நோ்மையான, வெளிப்படையான மக்கள் ஆட்சியைத் தர வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக நமது தலைவரால் (விஜயகாந்த்) தொடங்கப்பட்ட கட்சி தேமுதிக, இன்று 22- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நமது தலைவரின் அந்த லட்சியத்தையும் கொள்கைகளையும் வென்றெடுப்பதே நமது கடமை.

நிகழாண்டு முதல்முறையாக மாநிலங்களவையில் முதல் உறுப்பினரை பெற்றுள்ளோம். அதேபோல், மீண்டும் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். இதன்மூலம் விஜயகாந்தின் குரல் மீண்டும் சட்டப்பேரவையில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அவரது புகழும் மனிதநேயமும், மக்கள் மேல் அவா் கொண்டிருந்த பற்றும், பாசமும், கொள்கைகளும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.