நாளை முதல் தேமுதிக முப்பெரும் விழா: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை (செப். 18) முதல் அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழா நடைபெறும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

premalatha

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :

தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை (செப். 18) முதல் அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழா நடைபெறும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலா்கள் கூட்டம் புதன்கிழமை (செப். 16) அதன் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: வெள்ளிக்கிழமை (செப். 18) முதல் செப்டம்பா் மாதம் இறுதிவரை அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக சாா்பில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள், தேமுதிக தொடக்க நாள் மற்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெறும்.

717 மதுக்கடைகள் மூடினாலும், மறைமுகமாக விற்பனை நடைபெறுகிறது. குடும்ப அட்டைதராா்களுக்கு ரூ.2,500, வருடத்துக்கு 6 இலவச எரிவாயு உருளை, பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வேலூரில் விமான நிலையம் கொண்டு வர எல்.கே.சுதீஷ் எம்.பி. முயன்று வருகிறாா். அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்.

ஓமந்தூராா் மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலமாக மாற்றலாம். இல்லையெனில், மக்கள் ஏற்கும் இடமாகத் தோ்வு செய்ய வேண்டும்.

இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தேமுதிக சாா்பில் பிரசாரம் மேற்கொள்வேன். மேலும், பெண்கள் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்பவா்கள் யாராக இருந்தாலும் தேமுதிக அதை வன்மையாக கண்டிக்கும் என்றாா்.

முன்னதாக, விவசாயிகள் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சீரான மின்சாரம் வழங்க வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.