முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஊமையன்கோட்டை

ஊமையன்கோட்டை - கவிஞர் கண்ணதாசன்; பக்.168; ரூ.70; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17; )044-2433 2682.

Updated On :3 ஜூன் 2013, 12:00 am IST

ஊமையன்கோட்டை - கவிஞர் கண்ணதாசன்; பக்.168; ரூ.70; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17; )044-2433 2682.

ஆதாரப்பூர்வ சரித்திர பின்னணியோடு திரைப்படம் எடுக்கும் நோக்கிலேயே இந்த நாவலை எழுதியுள்ளார் கண்ணதாசன். கட்டமொம்மன் தூக்கிலிடப்பட்ட 15 மாதங்களுக்குப் பின், சிறையில் இருக்கும் ஊமைத்துரையை விடுவிக்கும் முயற்சியில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபடுவதிலிருந்து கதை தொடங்குகிறது.

ஊமையன்கோட்டையைப் பற்றி குறைவான செய்திகளையே அளித்திருக்கிறார். கதையின் நாயகனாக ஊமைத்துரை இருந்தபோதும், வீரத்தேவன் என்ற மறவர்குல இளைஞனைப் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது. சிவகங்கைச் சீமையின் வளம் பற்றியும், மக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் நிலவும் அமைதியை கெடுத்துக் கொள்ள விரும்பாத காரணத்தால், ஆங்கிலேயர்களிடத்திலே பெரியமருது பாண்டியருக்கு இருந்த அச்சம் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளைக்கார கம்பெனியார்களிடம் நட்பு பாராட்டினாலும், புரட்சி செய்வதில் விருப்பம் உள்ளவராகவே சின்னபாண்டியர் சித்திரிக்கப்பட்டுள்ளார். ஊமைத்துரையை சிறை உடைப்பு நடத்தி விடுவிக்கும் முயற்சியில் புரட்சிப் படை இளைஞர்களோடு, சின்னபாண்டியரும் ஈடுபடுகிறார்.

சிறை உடைப்புக்காக புரட்சிப் படையினர் நிதி திரட்டுவதற்காகப் படும் கஷ்டங்கள் எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவலின் காட்சிகள் அனைத்தும் கண்முன் நடப்பது போன்ற தோற்றமும் வாசிப்போருக்கு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கட்டும் முயற்சியில் புரட்சி படை இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள். பனஞ்சாறு சேர்த்து களிமண்ணால் கோட்டை உருவாக்கி முடிக்கும்போது, ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்துகிறது. அதில் கோட்டை முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டு, ஊமைத்துரை, வீரத்தேவன் உள்ளிட்டோரும் வீரமரணம் அடைவதாக சித்திரிக்கிறது ஊமையன்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.