தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புயலுக்குப் பின்னே பூந்தென்றல்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - சுப.உதயகுமாரன்; பக்.104; ரூ.75; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.

News image
Updated On :9 ஜூன் 2013, 5:45 pm

சுப. உதயகுமாரன்

புயலுக்குப் பின்னே பூந்தென்றல் - சுப.உதயகுமாரன்; பக்.104; ரூ.75; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராளியாக அறியப்பட்டிருக்கும் சுப.உதயகுமாரன், தனது 21 வயதில் எத்தியோப்பியாவில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்து ஆறாண்டுகள் அங்கே வாழ்ந்த அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார்.

எத்தியோப்பியாவில் அப்போதிருந்த ஜனநாயகமற்ற ஆட்சியின் கொடுந்தன்மைகள், மக்கள் பட்ட பாடுகள் எல்லாவற்றையும் நூல் விவரித்துச் செல்கிறது.

ஒரு நாவலைப் படிப்பதைப் போன்ற உணர்வு நூலைப் படிக்கும்போது எழுகிறது. ஒரு கம்யூனிச அனுதாபியாக எத்தியோப்பியாவுக்குச் சென்ற சுப.உதயகுமாரன், ஆறாண்டுகள் அங்கிருந்துவிட்டுத் திரும்பி வந்தபோது, ""ராணுவ ஆட்சி, இந்தியாவின் இன்னல்களுக்கு மாற்றாக இருக்குமோ என்று நினைத்திருந்த நான், நமது சனநாயக ஆட்சி அமைப்பை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்தைப் பெற்றேன். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துச் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை எப்படி ஒரு நரக அனுபவமாக இருக்கும் என்பதை அனுபவித்த காரணத்தால், இவற்றைக் காப்பாற்ற எதுவும் செய்யலாம், செய்ய வேண்டும் என உறுதி பூண்டேன்'' என்று கூறுகிறார்.

""வாழ்வில் தகராறுகளே இல்லாமல் பெறப்படுவதல்ல சமாதானம், மாறாக அவற்றை எப்படிக் கையாள்வது எனும் திறமையிலிருந்து கிடைப்பதுதான் அது'' என்று அவர் சொல்வது இந்நூலின் சாரத்தைக் கூறுவதாக உள்ளது. சிறந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.