நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஏமாறும் கலை

ஏமாறும் கலை - யுவன் சந்திரசேகர்; பக்.240; ரூ.190; காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.

Updated On :13 மே 2013, 12:28 am IST

ஏமாறும் கலை - யுவன் சந்திரசேகர்; பக்.240; ரூ.190; காலச்சுவடு, 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.

நவீன இலக்கியத்தில் புதிய கதை சொல்லியாக இருக்கிறார் யுவன் சந்திர சேகர். சும்மா பம்மாத்துப் பண்ணாமல் சக பயணி போன்றே நம்முடன் பயணிக்கிறது இச் சிறுகதை தொகுப்பு. மொத்தம் 12 சிறுகதைகள். கதை, கதைகளுக்குள் கதை, அதில் மற்றொரு கதை என்று பல படிம வெரைட்டிகளைத் தந்திருக்கிறார். சுவையான வாசிப்பனுபவம் கிடைக்கிறது.

சிறுகதைத் தொகுப்பு என்றாலும் ஒவ்வொரு கதையும் சிறு இழையில் தொடர்பு கொண்டே சொல்லப்படுகிறது. அதனதன் பிணைப்பை மிக எளிதாக நமக்குள் கொண்டுவந்து விடுகிறார் கதையாசிரியர்.

உதாரணமாக ஒரு கதை: வங்கியில் தொடர்ந்து பணம் கட்டவரும் பெண்மணி, தனது கணவருக்கு இரண்டு காலும் கிடையாது, அவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு வந்திருக்கிறேன் என்று கேஷியரிடம் சொல்லி கியூவில் நிற்காமல் பணம் கட்ட அனுமதி வாங்கிவிடுகிறார். அந்த வங்கியின் கேஷியரும் பரிதாபப்பட்டு அனுமதி தந்துவிடுகிறார்.

ஒரு திருமண விருந்தில் அதே பெண்மணியை கேஷியர் பார்க்க நேரிடுகிறது. கூடவே அவரது ஆஜானுபாகுவான கணவருடன். அவர் முழு காலுடன் நல்ல அரோக்கியத்துடன் இருக்கிறார். இதைப் பார்த்ததும் கேஷியருக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. அவர்கள் பார்வையில் படாமல் ஒதுங்கிக் கொள்ளும் அவர், "சை...இந்த அம்மாள் நம்மள இப்படி ஏமாத்திட்டாளே' என்று குமைந்து போகிறார். நாளைக்கு வரட்டும் நாக்க பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேக்கிறேன்' என்று நினைத்துக் கொள்கிறார். இதை அவரது ரயில் சினேகிதரிடம் பகிர்ந்து கொள்ள, அவரோ ""அந்தப் பெண்மனியிடம் எதுவும் கேட்காதீர்கள், அவர்கள் வந்தாலும் ஒண்ணும் தெரியாத மாதிரியே சர்வீஸ் பண்ணுங்க. விஷயம் தெரியாதது மாதிரியே நடந்துக்குங்க. உங்களுக்கு விஷயம் தெரியும்ன்னு அவங்களுக்குத் தெரியாதே, இப்ப ஏமாந்தது யாரு சொல்லுங்க ...'' என்கிறார். ஏமாற்றும் கலை தெரிந்தால் மட்டுமே இவ்வுலகில் ஏமாறாமல் தப்பிக்கலாம். இப்படிப்பட்ட சுவையான சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.