இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு - இதழ்கள் - சோ.ராஜலட்சுமி; பக்.280; ரூ.250; காவ்யா, சென்னை-24; )044 - 2372 6882.

Updated On :9 செப்டம்பர் 2025, 10:40 am IST

தமிழில் மொழியியல் ஆய்வு வரலாறு - இதழ்கள் - சோ.ராஜலட்சுமி; பக்.280; ரூ.250; காவ்யா, சென்னை-24; 044 - 2372 6882.

செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தமிழ்ப்பொழில், புலமை, மொழியியல் ஆகிய ஐந்து இதழ்களில் மொழியியல் குறித்து வெளியான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்யும் நூல்.

தமிழில் மொழியியல் ஆய்வுகள் எந்த முறையில் நிகழ்த்தப்பட்டன? என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

மொழியியலின் வரலாறு, தமிழுக்கும் பிறமொழிகளுக்கும் உள்ள உறவு, தமிழின் வரி வடிவம், தமிழ் மரபிலக்கணம், ஒப்பு மொழியியல், கோட்பாட்டாய்வுகள் என மொழியியல் குறித்து பல்வேறு திசைகளில் இந்நூல் பயணிக்கிறது.

"திராவிட மொழிகள் தனிக்குடும்பம், அவை சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை அல்ல' என்ற கார்டுவெல்லின் கருத்து பற்றி, பிற மொழியியல் அறிஞர்கள் கூறிய கருத்துகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கால்டுவெல்லுக்கு முன்பே எல்லீஸ் ஏழு மொழிகளைத் திராவிட மொழிகள் என்று கூற, கால்டுவெல்லோ 12 மொழிகள் திராவிட மொழிகள் என்று நிறுவினார் என்பன போன்ற தகவல்கள் சுவையானவை.

மொழியியலாளர்கள் ஒரு மொழியின் வரி வடிவத்தை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். நமது தமிழில் தொல்காப்பியர் காலத்தில் இருந்தே வரி வடிவம் பற்றிய ஒழுங்குமுறை இருந்திருக்கிறது.

தமிழில் வெளியான மொழியியல் ஆய்வுகள் மட்டுமின்றி, பிற மொழி, பிற நாட்டு மொழியியல் ஆய்வாளர்களின் கருத்துகளும் நமது மொழியியல் ஆய்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது. நோம்சோம்ஸ்கியின் மொழியியல் ஆய்வுக் கோட்பாடுகள், சசூரின் மொழியியல் கோட்பாடுகள், சமுதாய மொழியியல் கோட்பாட்டை உருவாக்கிய டெல் ஹைம்ஸின் கருத்துகள் போன்றவற்றின் தாக்கத்துடன் செய்யப்பட்ட மொழியியல் ஆய்வுகள் பற்றியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

மொழியியல் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மொழியியல் ஆய்வின் அடிப்படைகளை, வளர்ச்சிகளை எடுத்துச் சொல்லும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.