ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

ஐக்கிய முன்னணி தந்திரம்; ஜார்ஜ் டிமிட்ரோவ், (தமிழில்-ஏ.சீனிவாசன்) பக். 192, ரூ. 215, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50. 044-26251968.  

1935-ஆகஸ்ட் மாதம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரஸில் ஜார்ஜ் டிமிட்ரோவ் சமர்ப்பித்த அறிக்கை, ஆற்றிய உரை, அவரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமுமே இந்நூல்.

பாசிஸம் என்பது உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் மிகவும் கொடூரமாக நடத்தும் தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கடிவாளம் இல்லாத, இனவெறியும் ஆதிக்க வெறி பிடித்த யுத்தமுமாகும் என்கிறார் ஜார்ஜ் டிமிட்ரோவ்.

அவரது அறிக்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, தொழிலாளி வர்க்கத்தின் உடனடியான பொருளாதார அரசியல் நலவுரிமைகளைப் பாதுகாப்பது, பாசிஸத்துக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாப்பது ஆகியவைதான் ஐக்கிய முன்னணியின் தொடக்கப்புள்ளியாகவும் பிரதான உள்ளடக்கமாகவும் அமைய வேண்டும் என்கிறது.

கோடிக்கணக்கான உழைக்கும் மாதர்களை ஐக்கிய மக்கள் முன்னணியில் கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியமான தேவை; கம்யூனிஸ்டுகள் மாதர்களின் வெகுஜன இயக்கத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று ஒரு தீர்மானம் வலியுறுத்துகிறது.

தொழிலாளி வர்க்கம் சந்திக்கும் பிரச்னைகள் சுமார் நூறு ஆண்டுகளை நெருங்கியும் இன்றும் தொடரும் நிலையில், உரிமைகள் மீட்பு,  தொழிற்சங்க ஒற்றுமைக்கான போராட்டம் ஆகியவை காலமெல்லாம் நிலைத்திருப்பதற்கான தேவைகளை டிமிட்ரோவின் அறிக்கையும், அதன் மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் உணர்த்துகின்றன.

உலக நாடுகளில் அடிமைப்பட்டு கிடந்த தொழிலாளர் வர்க்கம் சந்தித்த பிரச்னைகள்,  நடத்திய போராட்டங்கள், அடைந்த எழுச்சி பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்கு ஏராளமான தகவல்களை அள்ளித் தருகிறது  இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.