ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

ஜெமினி சர்க்கிள் - சோம. வள்ளியப்பன்;  பக். 192; ரூ.200;  கிழக்கு பதிப்பகம், சென்னை-14; 044 - 4200 9603.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் வெளியான 28 சிறுகதைகளை நூலாசிரியர் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளார். நிதி மேலாண்மையையும், சுய முன்னேற்றத்தையும் எளிய நடையில் விளக்கிக் கூறும்  இப்படி ஓர் இலக்கியவாதி இருக்கிறார் என்பதை சமகாலத்துக்கு உணர்த்தும் படைப்பாக வெளியாகியிருக்கிறது. சிறுகதைக்கான வரையறைகள் உடைக்கப்பட்டு, புதுமை என்ற பெயரில் இடியாப்ப சிக்கலைப் போல கதை சொல்லும் நடைமுறை வழக்கத்துக்கு வந்துவிட்ட நிலையில், அத்தகைய சங்கடத்தை வாசகனுக்குத் தராமல் எளிய நடையில் இதில் கதைகள் விவரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.

இயல்பு வாழ்க்கைக்கு பரிச்சயமில்லாத பாத்திரங்களை கதையின் மாந்தர்களாக்காமல், நம்மைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியிருக்கிறார்  நூலாசிரியர்.
முதலாவதாக இடம்பெற்றிருக்கும் கறார் என்ற சிறுகதையின் நாயகி காய் விற்கும் ஒரு பெண். கறாராக இருப்பது என்பது எத்தகைய மனநிலை என்பதை ஓர் எளிய மனுஷியின் செயல்களின் மூலம் வாசகனுக்கு எடுத்துரைத்திருப்பது தனித்துவம்.

அதேபோன்று இந்தக் காலத்து பசங்க இருக்காங்களே, நின்று கொல்லும் தெய்வம், இடைவெளி, வக்கீல் மகள் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் வாசகனை வசியப்படுத்துகின்றன.

எளிய நடையில் மொழியையும், கதைக் களத்தையும் கையாண்டிருப்பதால் பல சிறுகதைகள் வாசகர்களிடம்  சிநேகம் கொள்கின்றன.

1990-களில் சிறுகதைகளை எழுதிய சோம வள்ளியப்பன், அதன் பின்னர் பல ஆண்டுகளாக அந்த முயற்சியை கைவிட்டிருந்தார். கரோனா பொதுமுடக்கத்தில் மீண்டும் தனது இலக்கியப் பணிக்கு அவர் நீர் வார்த்திருக்கிறார். அது விழலுக்கு இறைத்த நீர் இல்லை என்பதை நூல் உறுதிப்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.