காந்தி விநோபா; திருமலை; பக்.288; ரூ.100; காந்தி அமைதி நிறுவனம், 332 அம்புஜம்மாள் தெரு, சென்னை - 600 018.
வன்முறைக்கு மாற்றாக அகிம்சையை முன்னெடுக்கவும்; சமூகத்தில் நீ என்ன மாற்றம் கொண்டு வர விரும்புகிறாயோ, அதை முதலில் நீ உன் வாழ்வில் கொண்டு வர ஒரு சிறு பணியையாவது உடனே செய்யவேண்டும் என்றும் மகாத்மா காந்தியும் விநோபா பாவேயும் வலியுறுத்தினர். இவ்விரு ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய பகுதிகளைத் தாங்கி மாணவர் பதிப்பாக நூல் வெளிவந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் நிறவெறி காரணமாக, ஆங்கிலேயர்களால் காந்தி அவமதிக்கப்பட்டார். இதற்கு மறுநாள் குதிரை வண்டி பயணத்திலும் காந்தி அவமதிக்கப்பட்டபோது, ஆங்கிலேயப் பயணிகளே தடுத்து நிறுத்தினர் என்பது அறியப்படாத செய்தி.
'ஆஸ்ரமத்துக்கு ஆசி பெற வருவார்கள். ஆனால் நமது ஆஸ்ரமத்தையே ஆசீர்வதிக்க வந்தவர்தான் அவர்' என்று விநோபா பாவே குறித்து மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பலதரப்பட்ட மக்களை புரிந்துகொள்ள அவரவர் தாய்மொழி மூலமாக தொடர்பு கொண்டால்தான் சாத்தியப்படும் என்று விநோபா கருதினார். வேலூர் சிறையில் விநோபா இருந்தபோது தமிழ் கற்றுள்ளார். திருக்குறள், பாரதியார் பாடல்கள், தமிழ் இலக்கியங்களில் விநோபா அடிகளுக்கு நல்ல பயிற்சி இருந்துள்ளதையும், 'ழ' என்ற எழுத்து தமிழில் இருப்பதையும், தமிழ் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி எழுத்துகளில் சில மாறுதல்களை அவர் செய்துள்ளதையும் நூல் பதிவு செய்துள்ளது. நூலில் உள்ள சான்றிதழ் தேர்வுத் திட்டம், அகிம்சை கருத்துகளை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

5-ம் நாளாக தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!
கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

துன்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெருக்கும் தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

