புலிப்பால் நாவினால் சுட்ட வடு - எஸ்.கலியபெருமாள்; பக். 265; ரூ.350; அறம் பதிப்பகம், ஆரணி - 632316; 91507 24997.
பேராசிரியர், கேப்டன், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்ட நூலாசிரியரின் சுயசரிதம் இது. அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ரா. என எத்தனையோ தலைவர்கள் சாதியக் கட்டமைப்பைத் தகர்க்க முயன்றாலும், சமூகத்தின் அடித்தளத்தில் அப்பியிருக்கும் அழுக்கை இன்னும் துடைக்க முடியவில்லை என்று நூலில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆதிதிராவிட சமூகத்தில் பிறந்த நூலாசிரியர், தடைகளை உடைத்து பட்டங்களைப் பெற்றதும், தேசிய மாணவர் படையில் கேப்டன் பொறுப்புக்கு உயர்ந்ததும், பேராசியராகப் பல்லாயிரக்
கணக்கான மாணவர்களை உருவாக்கியதும் தனி மனிதனின் சாதனை என்பதைத் தாண்டி, சமூகத்தின் வெற்றியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
இளம்வயதில் இருந்து எதிர்கொண்ட சாதியப் பாகுபாடுகள், 80 வயதைக் கடந்த பிறகும் மறையா தழும்பாக மாறியிருப்பதைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
பல்லி, பாம்புகளைக் கூட கடவுள் என வணங்கும் சமுதாயம், சக மனிதர்களை ஓர் உயிராகக் கூட கருதாதது ஏன் என அவர் எழுப்பும் கேள்வி, மானுடத்தின் மற்றொரு முகத்தை துகிலுரிக்கிறது.
கீழவெண்மணி படுகொலை முதல் வட இந்தியாவில் ஆதிதிராவிட சிறுமி எரியும் நெருப்பிலிட்டு கொல்லப்பட்டது வரை சமூகத்தின் அவலங்கள் அனைத்தையும் தன் வரலாற்றுக்கிடையே பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சுய சரிதை என்பதைத் தாண்டி சுயநலமிக்க சமுதாயத்தின் களங்கங்களைச் சொல்லும் சரிதையாக வெளியாகியிருக்கிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

5-ம் நாளாக தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!
கால சர்ப்ப தோஷம் போக்கும் ஆதிகேசவ பெருமாள்! ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

துன்பங்கள் நீங்கி நன்மைகளைப் பெருக்கும் தொட்டியம் அனலாடீசுவரர் திருக்கோயில்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

