ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

DIN

ஊர் கூடி இழுத்த தேர் - அந்திமழை இளங்கோவன்; பக்.248; ரூ.200; அந்திமழை, சென்னை - 87; 044-24897540

ஒருவர் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருப்பினும், அவர் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து புதுப்பித்துத் தரும் விதமாக பல்வேறு உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.  

கடந்த காலங்களின் மகிழ்ச்சி, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றோடு  இன்றைய உழைப்பும் மட்டுமே நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் உற்சாகப்படுத்த முடியும் என்று நம்பிக்கை, அரசியல், சமூகம், கலை ஆகிய முதன்மைத் தலைப்புகளின் கீழ்  இந்தநூல் பதிவு செய்துள்ள 53 கட்டுரைகளும் எடுத்தியம்புகின்றன.  வாழ்க்கையின் மீதான சலிப்பு மனநிலையை அகற்றி உத்வேகம் கொள்ளச் செய்யும் விதமாக ஒவ்வொரு கட்டுரையும் ஓரிரு உண்மைச் சம்பவங்களை உள்வாங்கியுள்ளன. 

தேர்வின் தோல்வியையும்விட, எந்த ஏமாற்றத்தையும் விட வாழ்க்கை பெரியது என்ற கருத்தை மாணவர்கள் உணரவேண்டும் என்று நூலில் உள்ளது. ஹோண்டா, டொயோட்டா, சோனி, டி.வி.எஸ்., ரிலையன்ஸ், டாடா குழுமம், எம்.கே.டி. பாகவதர், சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்காவில் கோலோச்சும் இந்தியர்கள் என நூல் பதிவு செய்துள்ள ஒவ்வொரு தகவலும் உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடுதலின் முக்கியத்துவத்தை தெரிவிக்கின்றன. 

உக்ரைனிலிருந்து அகதியாக அமெரிக்காவுக்கு வந்த ஜன்கோம், வாட்ஸ் ஆப் செயலியை உருவாக்கினார். அந்தச் செயலியை ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதற்கான உடன்படிக்கை கையொப்பமான இடம் குறித்த தகவல் பெரும் நம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.  மாணவர் முதல் தொழில் முனைவோர் வரை அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.