நோய் நாடி சித்த மருத்துவம் நாடி - சோ. தில்லைவாணன்; பக்: 158; ரூ. 200; எழிலினி பதிப்பகம், சென்னை - 8; ✆ 044 - 2819 3206.
சித்த மருத்துவரான நூலாசிரியர் மூலிகைகள், கிழங்குகள், வேர்களெல்லாம் எந்தெந்த நோய்களுக்கு மருந்துகளாகப் பயன்படுகின்றன என்பதை விளக்கி "தினமணி'யில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் உண்டாக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. இதை வைத்துக்கொள்வது எப்படி என்பதை வழிகாட்டுகிறது இந்த நூல்.
எல்லா நோய்களுக்கும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருப்பதைப் படிக்கும்போது வியப்பு ஏற்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் வேம்பு, வெந்தயம், துளசி, வில்வம், மஞ்சள் போன்றவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குணமுடையவையாகவும், நிலவேம்பு, ஆடாதொடை, பப்பாளி இலை போன்றவை டெங்கு வராமல் காக்கக்கூடியவையாகவும், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி, கீழாநெல்லி போன்றவை சிறுநீரகத்தைக் காக்கும் மருந்துகளாகவும் இருக்கின்றன என்று கூறுகின்றார் நூலாசிரியர்.
மருத்துவ உலகமே மருந்து காணாமல் தவித்துவரும் புற்றுநோய்க்குக் கூட பூண்டு, மிளகு, துளசி, கீழாநெல்லி, நிலவேம்பு போன்றவை மருந்தாகப் பயன்படுகின்றன என்று கூறுகிறார் நூலாசிரியர்.
வீட்டு அஞ்சறைப் பெட்டியில் உள்ள மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தயம், சோம்பு, சுக்கு, ஏலம், கிராம்பு போன்றவை சித்த மருத்துவம் சார்ந்த மருந்துப் பொருள்களே என்பதை ஒரு கட்டுரையில் (அஞ்சறைப் பெட்டி எனும் மருந்துப் பெட்டகம்) விளக்கியுள்ளார். யோகாசனத்தின் பயன்களையும் ஒரு கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். சித்த மருத்துவத்தின் பயன்களை எளிய முறையில் விளக்கும் சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை: ஓ. பன்னீர்செல்வம்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

