சொல்லாததையும் செய் - சோம. வள்ளியப்பன்; பக். 144; ரூ.160; கிழக்கு பதிப்பகம், சென்னை-14; ✆044-42009603.
நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, கற்க கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து சுவை குன்றாமல் புரியும் வண்ணம் எழுதியுள்ள நூல் இது.
39 அத்தியாயங்கள். ஒவ்வொன்றிலும் முக்கிய கருத்தை பெட்டியாக வடிவமைத்து நூலாசிரியர் படைத்துள்ளார். 'எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற எண்ணம் நம் சிந்தனையை அடைத்துக் கொள்வதைப் போல, ஏற்கெனவே தெரிந்ததுதான் என்கிற எண்ணமும் கற்றலைக் கெடுக்கும்' என்று குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
பழம்பெருமை பேசிக்கொண்டிருக்காமல், இப்போது என்ன செய்கிறோமோ அதற்கான மதிப்பைத்தான் உலகம் நமக்குத் தரும் என்பதை உறுதியுடன் பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர். 'வேகம் மட்டுமல்ல, போகிற திசையும் முக்கியம்.
அப்போதுதான் வெற்றி கிட்டும்' என்ற உண்மையை மனதில் ஏற்றியுள்ளார். எப்போதும் ஆயத்தமாக இருப்பதே மாற்றங்களை எதிர்கொள்ளும் வழி என்றும், இதமாக, இணக்கமாகப் பேசினால் சமாதானத்துக்கு வழி என்றும் வாழ்வியல் தத்துவத்தை அழகாக விவரித்துள்ளார்.
'மாறிக்கொண்டிருக்கும் உலகில், ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. புதிய திறன்களையும், வேலைகளையும் கற்றுக் கொள்வது அவசியம்' என்று அவர் அழகாகக் கூறியுள்ளார். பயத்தையும், தயக்கத்தையும் தவிர்த்தால் எதையும் சாதிக்க முடியும். எதைச் செய்தாலும் நிறைவாகச் செய்து முத்திரை பதிப்பதுதான் அழகு. நல்ல பழக்கங்கள் தொடர வேண்டுமானால், முயற்சியும் மன உறுதியும் இருக்க வேண்டும். அன்பான வார்த்தைகளும், அனுசரணையான பேச்சுகளுமே வாழ்க்கையின் பலம் என்பதையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவோர் அறிய வேண்டிய தகவல்கள் உள்ளன. படித்து முடித்தால் புதிய அனுபவம் பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு

எம்ஜிஆர் ஆரம்பித்த, ஜெயலலிதா வளர்த்த அதிமுக இன்று இல்லை: ஓ. பன்னீர்செல்வம்
ஆரண்ய காண்டம் மறுவெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

