பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

மறைக்கப்படும் ஈவெரா - ம.வெங்கடேசன்; பக். 152; ரூ. 180; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127; ✆81480 66645.

அரசியலிலும் சமூகவியலிலும் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய சீர்திருத்தவாதிகளில் பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி குறிப்
பிடத்தக்கவர். எனினும், இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிர்ப்பு, இந்து சமய விரோத உணர்வு ஆகியவற்றால், பொதுவானவராக அவர் ஏற்கப்படவில்லை.

அவரது ஜாதி ஒழிப்பு, மதுவிலக்கு கருத்துகள் திராவிட அரசியலாளர்களால் விதந்தோதப்படுவது போல அத்துணை சிறப்பாக இல்லை என்பதை நூலில்  சான்றுகளுடன் நிறுவி இருக்கிறார் அம்பேத்கரிய ஆய்வாளரான ம.வெங்கடேசன்.

'துக்ளக்' வார இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூலைப் படிக்கும் எவரும், ஈவெரா இப்படியெல்லாம் கூறியிருக்கிறாரா என்று அதிர்ச்சி அடைவது திண்ணம். ஆனால்,  'விடுதலை'  இதழ் தலையங்கங்கள், நூல்களிலிருந்தே ஆதாரத்தை முன்வைத்து, மறைக்கப்படும் ஈவெராவின் மறுபக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.

ஈவெராவின் அந்தந்த நேரத்துச் சொல்லாடல்கள் பலவும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையும், கொச்சையாக இருப்பதையும் தனது நூலில் பதிவு செய்திருக்கும் ம.வெங்கடேசன், பெரியார் என்ற பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை தனது சிறு நூலால் இடறி இருக்கிறார்.

15 அத்தியாயங்களில்,  இதுவரை அறியப்படாத ஈவெராவின் கருத்துகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கும் நூலாசிரியரின் ஆய்வுத்திறன், நூல் முழுவதும் வெளிப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.