தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005-ம் பொதுத் தகவல் அலுவலரின் கடமைகளும் -வடகரை செல்வராஜ்; பக்.648; ரூ.550; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; ✆044-29999611.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-இல் மத்திய அரசு கொண்டு வந்தது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சிறப்பான திட்டம். அரசுத் திட்டங்கள், மக்கள் நலப் பணிகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில், ஆயிரக்கணக்கான ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சாதாரண குடிமகன் கூட குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்பட கேள்விகளை எழுப்பி தகவல்களைப் பெற முடியும். அதுவும் தபால் செலவும், பத்து ரூபாய் கட்டணத்தில்தான்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் தகவல்களைப் பெறுவது எப்படி, விண்ணப்பிப்பது எப்படி, சந்தேகங்கள், தகவல்களைத் தர மறுத்தால் மேல்முறையீடு செய்வது எப்படி என்பவற்றுடன் முக்கிய தீர்ப்புரைகள், ஆன்லைனில் விண்ணப்பிப்பது, கட்டண விலக்கு பெறுதல் என்பது உள்பட சட்டம் குறித்து முழுமையான கையேடாக இந்த நூல் விளங்குகிறது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் தகவல் பெற விண்ணப்பிக்க இருக்கும் பொது தகவல் அலுவலர்களின் முகவரிகளிலும் இந்த நூலில் இருப்பது சிறப்பு.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவான வரலாறு என்ற கட்டுரையில், சட்டம் உருவாக காரணமாக இருந்த சம்பவங்கள், நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவோரும், ஊழல்- முறைகேடுகள் நடைபெறுவதைத் தட்டிக் கேட்கத் துணிவோரும் அவசியம் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

Akira And FIFA! Anime மற்றும் Games குறித்த
ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!
பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்

கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

