சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

DIN

நபித் தோழர்கள் வரலாறு! (நான்கு பாகங்கள்)- தமிழ்மாமணி மெஹர் ப.யூ.அய்யூப்;  பக். 1719 ; ரூ. 2000 ; ரஹ்மத் பதிப்பகம்,  சென்னை-4; ✆ 044- 2499 7373.

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரையுடன் 10 பாகங்கள், இறைத்தூதரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன அடங்கிய ஹதீஸ் மொழிபெயர்ப்பு 35 பாகங்கள், இஸ்லாமிய வரலாறு 6 பாகங்கள், நபிகள் நாயகம் வரலாற்றைத் தொடர்ந்து இறைத்தூதரின் உற்ற தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான்(ரலி), அலீ (ரலி) ஆகிய நால்வரின் வரலாற்றை வெளிக்கொணர்ந்திருக்கிறது ரஹ்மத் பதிப்பகம்.

இஸ்லாமிய சிந்தனையாளர்கள் திருக்குர் ஆனுக்கும், ஹதீஸுக்கும் அடுத்தபடியாகப் போற்றி மகிழ்வது நபித் தோழர்களின் வரலாறுகள். அவர்கள் நால்வரையும் முறையே அதிசயத் தோழர், உன்னத ஆளுநர், ஒப்பற்ற வள்ளல், அறிவின் நுழைவாயில் என்று அடையாளப்படுத்திய பெருமை "கவிக்கோ' அப்துல் ரஹ்மானைச் சாரும்.

மொழிபெயர்ப்புத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஈடுபட்டு, ஏறத்தாழ அரை லட்சத்துக்கும் அதிகமான பக்கங்களை மொழிபெயர்த்திருக்கும் பெருமை ரஹ்மத் பதிப்பகத்துக்கு உண்டு. ஆதாரபூர்வமான மூலநூல்களை அடிப்படையாகக் கொண்டு அவை வெளியிடப்படுகின்றன. 

நபித் தோழர்கள் நால்வரின் வரலாறும் சென்னை புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த மெஹர் ப.யூ. அய்யூப்பால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், திறனாய்வாளர் என்கிற பெருமைகளுக்கு உரித்தான அவரது மொழியாக்கம், நல்ல தமிழில் அரபி வார்த்தைகளை முல்லைச் சரம் தொடுத்தாற்போல இணைத்து வழங்கியிருப்பது தனிச் சிறப்பு.

தனிச்சிறப்புகள் கொண்ட நால்வரின் வாழ்க்கையும், மனித இனத்துக்கு வெவ்வேறு விதமான செய்திகளைத் தருகிறது. உலகப் பேரொளி நபிகள் நாயகத்தின் வரலாற்றை, நபித் தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல் தனித்துப் பார்ப்பது இயலாது. அதனால்தான்  நான்கு புத்தகங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.