ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை

இப்புத்தகத்தில் அறுபடை வீட்டை யோகமார்க்கத்தில் காணச்செய்கிறார் ஆசிரியர்.

News image
Updated On :24 மார்ச் 2025, 8:00 am

DIN

அறுபடை வீடு தந்த திருமுருகாற்றுப் படை - கே.பி. அறிவானந்தம்; பக்.113; ரூ.150; சத்யா எண்டர்பிரைசஸ் - சென்னை 94: ✆ 044 - 4507 4203.

மலையின் தெய்வம் முருகன். மலையில் தோன்றியதால் அவன் சிறு தெய்வமல்ல. அவன் பேருருவைச் சொல்லி இப்பிரபஞ்சத்தின் தெய்வம் என முருகனின் பெருமையைக் கூறி தொடங்குகிறது இந்நூல்.

இந்நூலானது, கந்தபுராணம் மற்றும் திருப்புகழ் காட்டும் முருகனை நமக்கு ஆதிமுருகனாக திருமுருகாற்றுப்படை காட்டுவதாக ஆய்வு செய்கிறது. குறிப்பாக திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) என்றாலே அது சூர சம்ஹாரம்தான். ஆனால் சம்ஹாரம் பற்றி கூறாமல், முருகனின் ஆறு முகங்களையும், பன்னிரு கரங்களைப் பற்றி திருமுருகாற்றுப்படை கூறுவதாக இந்நூல் ஆய்வு செய்து தருவது குறிப்பிடத் தகுந்தது.

திருமுருகாற்றுப்படையின் தொன்மை பற்றியும், அது தோன்றிய காரணம், அதிலுள்ள பாடல்களைப் பற்றிக் குறிப்பிடுகிற நூலாசிரியர், பாடல்களைச் சொல்லுவதால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கியுள்ளார். இப்புத்தகத்தில் அறுபடை வீடுகளின் பாடல்கள் விளக்கப்பட்டு பின்னர் அவற்றைக் குறித்த வரலாறு கூறப்படுகிறது.

திருவாவினங்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என அவை தொடர்பாக ஏற்கெனவே நாம் அறிந்தவற்றை திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் நமக்கு வேறொரு கோணத்தில் காண்பித்திருப்பதை இந்நூல் நமக்கு வெளிச்சமிட்டுக்காட்டுகிறது.

இறுதியாக இப்புத்தகத்தில் அறுபடை வீட்டை யோகமார்க்கத்தில் காணச்செய்கிறார் ஆசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.