பிரிட்டிஷ் வந்தேறிகளின் வம்புப் பிரசாரம் - பி.எஸ்.சர்மா; தெலுங்கிலிருந்து தமிழில் - ராஜி ரகுநாதன்; பக்.264; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ், சென்னை -600127, ✆ 8148066645.
இந்தியாவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பிரிட்டிஷார் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அதற்கு முக்கியமான ஆயுதமாக விஷமத்தனமான பிரசாரங்களை மேற்கொண்டனர்.
ஆரியர்- திராவிடர் கொள்கை, பிராமண எதிர்ப்பு, ஆங்கிலமே சிறந்தது, சத்தற்ற உணவு, ஏழை தேசம், ஆதாரமற்ற மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் எவ்வாறெல்லாம் பிரிட்டிஷார் இந்தியா குறித்து எதிர்மறை கருத்துகளைப் பரப்பினர் என்பதை இந்நூல் தகுந்த விளக்கங்களுடன் வெளிப்படுத்துகிறது.
இந்தியர்களின் வரலாற்றுப் பெருமை, தன்னம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் திட்டமிட்டு பிரசாரம் செய்ததன் மூலம் பிரிட்டிஷார் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றவர்களா அல்லது அது வெறும் பிரமையா? என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறது இந்நூல்.
பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகர்களான பிரிட்டிஷாரின் கொள்கைகளை அடியொற்றி, இன்றைய இந்திய அரசியல்வாதிகளும் அன்றைய பொய்ப் பிரசாரத்தை வளர்த்து வருவதைக் கோடிட்டு உணர்த்துகிறார் நூலாசிரியர்.
பிரிட்டிஷாரின் ஆதாரமற்ற புரட்டுகளைத் துல்லியமாக வெளிச்சம் போட்டு காட்டுவதோடு, இந்தியப் பாரம்பரியத்தின் பெருமைகளை அசைக்க முடியாத ஆதாரங்களோடு இந்நூல் ஆவணப்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகன் கற்பூரி தாக்கூர்

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

சான்றோர்...பாலர்

பலூசிஸ்தான்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


