விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி ஆலோசனை!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
/

பீர்முகம்மது

மதுவிலக்கு விவகாரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் சிலேடையாக பீர்முகம்மது பேசியது போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :6 மே 2026, 7:26 pm IST

பீர்முகம்மது - செ. திவான்; பக். 124; ரூ. 150; ரெகான்- ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி- 627 002, ✆ 90803 30200.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட இரவணசமுத்திரத்தைச் சேர்ந்த பீர்முகம்மது, 1925-இல் பிறந்து 1981-இல் மறைந்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த சிறந்த பேச்சாளரான இவர், காயிதே மில்லத்துடன் நெருங்கிப் பழகியவர்.

அப்போதைய மேலப்பாளையம் தொகுதியில் 1967-இல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் முஸ்லிம் லீக் கட்சியிலும், மக்கள் பிரதிநிதியாகவும், சமூகப் பணியிலும், விடுதலைப் போராட்டத்திலும் ஆற்றியப் பணிகள், அனாதை இல்லங்கள் நடத்தியவை உள்ளிட்டவை நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

இலங்கை, பர்மா அகதிகள் மறுவாழ்வு, தோல் பதனிடும் தொழில் சீரமைப்பு, காவல் துறையினருக்கான சலுகைகள், கைத்தறிக்கு தனி அமைச்சர், காவிரி பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சேலம் உருக்காலையை மீண்டும் செயல்படுத்தும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாடு தழுவிய பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்ததைப் பார்க்கும்போது, அவர் மாநில நலன்களின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

மதுவிலக்கு விவகாரத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் சிலேடையாக பீர்முகம்மது பேசியது போன்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

இவரைப் பற்றியே புகழ் பாடாமல் 1965-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் போரில் முஸ்லிம் லீக் கட்சி இந்தியாவுக்கு ஆதரவாக மேற்கொண்ட பணிகள், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்த போர் வீரர்கள் போன்ற வரலாற்றில் முத்திரை பதிக்கும் நிகழ்வுகளையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.