தமிழ் மகாத்மா ஜே.சி. குமரப்பா- ஜஸ்டின் திவாகர்; பக். 64; ரூ. 70; நெய்தல் வெளி, ஈத்தாமொழி சாலை, நாகர்கோவில்-629 002, ✆ 04652-229702.
பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் மகாத்மா காந்தியின் கைகளுக்கு மாறியபோது, அது வெகுஜன இயக்கமாகி பரவலானதற்கும், மகாத்மாவின் ராமராஜ்யம் தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் முக்கியமானவரான ஜே.சி. குமரப்பாவின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக இந்த நூல் பதிவு செய்துள்ளது.
ஒவ்வொரு நொடியும் நேர்மை, எளிமை, கண்டிப்புடன் குமரப்பா வாழ்ந்தார் என்பதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சம்பவமும் எடுத்துரைக்கிறது.
சிக்கனத்துக்கு பெயர்போன மகாத்மா காந்தியிடமே குமரப்பா கறாராக நடந்துகொண்ட நிகழ்வு வியப்பை ஏற்படுத்துகிறது.
தவறு எனக் கருதும் எதையும் அது மகாத்மா காந்தியே செய்தாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர் குமரப்பா. அன்றைய பெருந்தலைவர்களிடம் தமது மாறுபட்ட கருத்தைச் சொல்ல குமரப்பா தயங்கியதில்லை என்பதிலிருந்து அவரது துணிவும் நேர்மையும் வெளிப்படுகிறது.
தமது உடலை தகனம் செய்ய விறகுக்கட்டை
களைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதால், சாணத்தைப் பயன்படுத்துமாறு
குமரப்பா உயில் எழுதி வைத்திருந்தார்.
பண்பட்ட காந்தியவாதி; தமிழகம் தந்த பசுமை சிந்தனையாளர்; காந்திய சிந்தனைக்கு ஒரே வாரிசு; 'தற்சார்பு பொருளாதாரத்தின் தந்தை' என்று இன்றளவும் குமரப்பா போற்றப்படுவதற்கு அவரது தேசப் பற்றே முதன்மையான காரணம் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருங்கால ஊடக உலகம்

நாவல் வடிவில் காளிதாசரின் சாகுந்தலம்

சிலப்பதிகாரத்தில் சனாதனம்

தமிழ்ப் பெருவெளியில் இசுலாமியப் பேரொளி
வீடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை


