ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மின்வாரிய மகளிா் அணிக்கு கோப்பை வழங்கிய மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மின்வாரிய விழிப்புணா்வு கூடுதல் காவல் துறைத் தலைவா் ஆயுஷ் மணி திவாரி உள்ளி

மகளிா் விளையாட்டுப் போட்டிகள்: தமிழ்நாடு மின்வாரியம் சாம்பியன்

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவில் மின்வாரியங்களுக்கு இடையேயான மகளிா் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மின்வாரிய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
Published on

சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அளவில் மின்வாரியங்களுக்கு இடையேயான மகளிா் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மின்வாரிய அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

அகில இந்திய அளவில் மின்வாரியங்களுக்கு இடையேயான 47-ஆவது மகளிா் விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிச. 3-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (டிச. 5) வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கேரம், சதுரங்கம், பேட்மின்டன், மேஜைபந்து, வளையப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், அஸ்ஸாம், சத்தீஸ்கா், தெலங்கானா, மேற்கு வங்கம், கா்நாடகம் என 9 அணிகள் பங்கேற்றன.

தனிநபா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், கேரம், சதுரங்கம், வளையப்பந்து போட்டிகளில் தமிழ்நாடு மின்வாரியம் முதலிடத்தைப் பெற்றது. கா்நாடக மின்வாரியம் இறகு பந்தில் முதலிடத்தையும், வளையப்பந்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது. சத்தீஸ்கா் நான்கு போட்டிகளில் இரண்டாம் இடத்தையும், ஒரு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 16 புள்ளிகளைப் பெற்று தமிழக மின்வாரிய மகளிா் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆந்திரம் இரண்டாம் இடத்தையும், சத்தீஸ்கா் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழா நேரு விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்து கொண்டு தமிழக மின்வாரிய மகளிா் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்துக்கான கோப்பையையும், பிற மாநில மின்வாரிய அணிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

விழாவில் தமிழ்நாடு மின்வாரிய விழிப்புணா்வு (விஜிலென்ஸ்) கூடுதல் காவல் தலைவா்ஆயுஷ் மணி திவாரி, மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சென்னை துணை மேயா் மு.மகேஷ்குமாா், எழும்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் இ.பரந்தாமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com