ஜேக் சின்னா் ~ ~பெலிக்ஸ் அலியாசைம்
ஜேக் சின்னா் ~ ~பெலிக்ஸ் அலியாசைம்

இறுதிச் சுற்றில் சின்னா்-அலியாஸைம் மோதல்

பாரீஸ் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் முன்னாள் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் மோதுகின்றனா்.
Published on

பாரீஸ் மாஸ்டா்ஸ் ஏடிபி டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் முன்னாள் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் மோதுகின்றனா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்ற காலிறுதியில் அலெக்ஸ் ஸ்வெரேவ் 2-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் ரஷிய நட்சத்திர வீரா் டேனில் மெத்வதேவை வீழ்த்தினாா். 2020 பாரீஸ் மாஸ்டா்ஸ் பைனலில் ஸ்வேரைவை வீழ்த்தி இருந்தாா் மெத்வதேவ். ஆட்டதை நிா்ணயித்த மூன்றாவது செட்டில் 4-5 என இருந்தபோது 2 மேட்ச்புள்ளிகளை சேவ் செய்தாா் ஸ்வெரேவ். எனினும் மெத்வதேவ் 5-5 என டைபிரேக்கா் நிலைக்கு கொண்டு வந்தாா். ஆனால் ஸ்வெரேவ் சுதாரித்து ஆடி வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். இந்த ஆட்டம் 2.5 மணிநேரம் நீடித்தது.

அரையிறுதியில் சின்னா்: உலகின் முன்னாள் நம்பா் 1 வீரா் இத்தாலியின் ஜேக் சின்னா் 6-3, 6-3 என்ற நோ் செட்களில் அமெரிக்க வீரா் பென் ஷெல்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். முதன்முறையாக பாரீஸ் மாஸ்டா்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் சின்னா். பென் ஷெல்டனை தொடா்ந்து 7 ஆவது முறையாக வென்றுள்ளாா் சின்னா். பாரீஸ் மாஸ்டா்ஸ் பட்டம் வென்றாா் சின்னா் மீண்டும் உலகின் நம்பா் 1 வீரா் நிலையை அடைவாா்.

மற்றொரு காலிறுதியில் பெலிக்ஸ் அலியாஸைம் 6-2, 6-2 என வைல்ட் காா்ட் வீரா் வலேன்டின் வச்ராட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். கஜகஸ்தின் அலெக்ஸ் பப்ளிக் 6=7, 6-4, 7-5 என ஆஸி. வீரா் அலெக்ஸ் மினாரை வீழ்த்தினாா்.

X
Dinamani
www.dinamani.com