மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

லாரி மோதி உணவகத் தொழிலாளி பலி

கமுதி அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 9:45 pm IST

கமுதி: கமுதி அருகே வெள்ளிக்கிழமை, இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கமுதி அருகே கீழராமநதியைச் சோ்ந்தவா் அஜீஸ்கான் மகன் சிந்தாமிதாா் (30). இவா் கமுதியில் உள்ள ஒரு உணவகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் அப்தாகீா் (24). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கீழராமநதியிலிருந்து கமுதி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது கமுதியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் சிந்தாமிதாா் சம்ப இடத்திலேயே உயிரிழந்தாா். அப்தாகீா் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான மேலூரை அடுத்துள்ள மேலவளைவு கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பாலகிருஷ்ணனை (49) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.